Translate

வெள்ளி, 28 மே, 2010

தியானம் செய்யும் வழி முறை




ஒரு அமைதியான இடத்தில் ஸ்ரீ மாதாஜியின் புகைப்படத்தினை பார்த்தவாறு இரண்டு கைகளையும் விரித்து உள்ளங்கை ஆகாயத்தைப் பார்த்தப்படி மடியில் வைத்து அமரவும். கண்களை மூடி எண்ணங்கள் தன்னால் அடங்கும் வரை விடவும். எண்ணங்களுடன் போராடாமல் இயல்பாக விட்டுவிடவும். அப்பொழுது சகஜ யோகா இயல்பாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

சம நிலைப்படுத்துதல் :

1 . முதலில் இரண்டு கைகளை பூமியின் மீது வைக்கவும்.

" தாயே, தயவு செய்து என் உடலில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளை நீக்கிவிடுங்கள். "( ஒரு நிமிடம் )


2 . இடது கையை மடிமீது வைத்து வலது கையை பூமியின் மீது வைக்கவும்.

" தாயே, தயவு செய்து எனது இடது பக்கத்தில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளை நீக்கிவிடுங்கள்." (ஒரு நிமிடம்)

3 . வலது கையை மடிமீது வைத்து இடது கையை ஆகாயத்தை நோக்கியவாறு வைக்கவும்.


" தாயே, தயவு செய்து எனது வலது பக்கத்தில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளை நீக்கிவிடுங்கள்." (ஒரு நிமிடம்)

4 . இரண்டு கைகளை மடிமீது வைத்து,

" தாயே என்னை நிகழ்காலத்தில் நிலைத்திருக்கக் செய்யுங்கள்." (ஒரு நிமிடம் )




ஆன்ம விழிப்புணர்விற்கான பயிற்சி:






1 . இடது கையை மடிமீது வைத்து வலது கையை இடது இதயத்தின் மீது வைக்கவும்.

" தாயே உன் அன்பால் நானே ஆத்மா " (பல முறை )







2 . இடது கையை மடிமீது வைத்து வலது கையை இடது கழுத்தின் மீது வைத்து,

" தாயே உன் அன்பால் நான் குற்றமற்றவன்."







3 . இடது கையை மடிமீது வைத்து வலது கையை நெற்றியின் மீது வைத்து,

" தாயே உன் அன்பால் நான் எல்லோரையும் மன்னிக்கின்றேன். என்னையும் மன்னிக்கின்றேன்."




4 . இடது கையை மடிமீது வைத்து வலது கையை தலையின் பின்புறம் வைத்து,

" தாயே நான் தெரிந்தும், தெரியாமலும் செய்த அனைத்து தவறுகளிலிருந்து, என்னை மன்னித்து விடுங்கள். "




5 . வலது கை விரல்களை, அகலமாக விரித்து உள்ளங்கையை நம்முடைய உச்சந்தலையில் வைத்து அழுத்தி கடிகார முள் சுத்துவது போல் கைகளை சுற்றிக் கொண்டு, ( 7 முறை )

" தாயே தயவு செய்து எனக்கு ஆன்ம விழிப்புணர்வைத் தாருங்கள்."
என்று வேண்டிக் கேட்டுக் கொள்ள வேண்டும்




பிறகு இரண்டு கைகளையும் மடி மீது வைத்து, 5 முதல் 10 நிமிடங்கள் வரை தியானம் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக