Translate

ஞாயிறு, 6 மார்ச், 2011

அன்னை H .H . ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி மஹா சமாதி அடைந்தார்


அமைதியின் அடிப்படைகளை மனிதர்களுக்கு உலகளவில் உ ணர வைத்த தாயும், சஹஜ யோகா நிறுவனருமான அன்னை H .H . ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி மஹா சமாதி அடைந்தார் .




அன்னை அவர்கள் 23 .02 .2011 அன்று மாலை இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் மஹா சமாதி அடைந்தார்கள்.
ஸ்ரீ மாதாஜி அவர்களால் நிறுவப்பட்ட சஹஜ யோக தியானம் ஒரு ஆன்மிக வாழ்க்கை முறையாகும். 120 நாடுகளில் சஹஜ யோக தியானம் பின்பற்றப்படுகிறது . இதன் மூலம் இலட்சக்கணக்கான ஆன்மிக சாதகர்கள் சாதி, மத, வேறுபாடுகளை மறந்து இந்த தியான முறையை பின்பற்றுகிறார்கள். ஸ்ரீ மாதாஜி அவர்களால் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனங்களில் நோயிடாவில் உள்ள அநாதை குழநதைகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்குமான "விஷ்வ நிர்மல பிரேம் ஆசிரமம்" , நாக்பூரில் உள்ள கலை, கலாச்சார முன்னேற்ற மையமான "பி. கே. சால்வே கலஸ் மையம் " , நவி மும்பையில் உள்ள "சஹஜ யோக ஆன்மிக மருத்துவமனை" என்பவை குறிப்பிடத்தக்கவை.

1970 ஆம் ஆண்டு மே திங்கள் 5 ஆம் நாள் குஜராத் மாநிலத்தின் "நார்கோல்" கடற்கரையில் ஆன்மிக வரலாற்றில் முதன் முறையாக "குண்டலினி " என்னும் ஆன்மீக சக்தியை "சஹஸ்ரார" என்ற ஏழாவது சக்கரத்தை கடக்க செய்து, ஒரே நேரத்தில் எண்ணற்ற சாதகர்கள் ஆன்மீக விழிப்புணர்வை அடையும் சஹஜ யோக தியான முறையை கொடுத்து அருளினார். கடந்த நாற்பதாண்டு காலமாக தனது ஆன்மீக பணியின் மூலமாக மனிதர் களிடையே, இருக்கும் ஏற்ற, தாழ்வுகளை அகற்றவும், மதம், இன, மொழி வேறுபாடுகளை நீக்கவும், அயராது பாடுபட்டார்.

இந்த "சஹஜ யோக தியானம்" என்றுமே இலவசமாக அளிக்கப்படுகிறது. ஸ்ரீ மாதாஜி அவர்களின் கனவான அன்பும், அமைதியும் இவ்வுலகில் நிலை நாட்ட, ஒருமைப்பட்ட உலகத்தை நனவாக்க அவரது சீடர்கள் அன்மீக பணியை என்றும் தொடர்வார்கள் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.