Translate

செவ்வாய், 31 மே, 2011

கூட்டுப் பிரபஞ்ச உணர்வை நோக்கி பயணம்





நீங்கள் இப்போது ஆன்ம விழிப்புணர்வு பெற்று உங்களுக்குள் அமைதி நிலவுகிறது. நமக்குள்ளிருக்கும் அழகும், கருணையும், அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் மேலும் நாம் உள்முகமாக செல்ல வேண்டும். தியான நிலையை அடைய விரும்புவார்கள். நீங்கள் தாகத்துடன் இருக்கும் பொது நீரை தேடி செல்வீர்கள். அதைப் பருகி ஆனந்தமும் , அமைதியும் அடைகிறீர்கள். புறச்சூழலில் இருக்கும் பொருட்கள் எவ்வாறு உங்களுக்கு அமைதியும் , ஆனந்தத்தையும் கொடுக்கும்? அகச்சுழலில் அவற்றைத் தேட வேண்டும். புறச்சுழலில் உள்ளப் பொருட்களில் விருப்பம் கொள்ளாமல் தவிர்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

தியானம் செய்யுங்கள். அகமுகமாக உங்களுக்குள் இருக்கும் ஆன்மாவை அடைந்து சச்சிதானந்த உணர்வைப் பெறவும் உள்ளிருக்கும் ஆன்மா பிரகாசிக்கும் பொது அதன் ஒளியில் சூட்சுமமாக உள்ள அந்தரங்க தனித்தன்மைகள் வெளிப்படுகிறது. இதை அணுக நீங்கள் உங்களுக்குள் அகமுகமாக செல்ல வேண்டும். இந்த ஆன்ம சக்திக்கு புறம்பாக செயல்படும் போது உங்களது பயணம் தடைபடுகிறது.

உங்களது அன்பின் சக்தியை அனுபவிக்க வேண்டும். இது இறைவனை நோக்கி செல்லும் தனி நபரின் பயணமாகும். நீங்கள் தியானம் செய்யும் போது, அந்த இடத்தை அடைகிறீர்கள். பிறகு கூட்டுப் பிரபஞ்ச உணர்வை அனுபவிக்கிறீர்கள். இந்தப் பயணமானது தனி மனிதனில், உல் முகமாக பயணம் எனலாம். இதில் எவரும் உங்களுடன் பயணம் செய்வதில்லை. இதில் எவரும் உங்கள் உறவினரல்ல, சகோதரர் அல்ல, நண்பனல்ல, நீங்கள் முழுவதுமாகத் தனிப்பட்டவரே .

தனிமையில்தான் செல்ல வேண்டும். எவரையும் வெறுக்கக் கூடாது. பொறுப்பற்று இருக்க வேண்டாம். தனிமையில் பயணம் செய்தாலும் அந்தப் பேரானந்த சாகரத்தை அடைந்தவுடன், உலக மக்கள் அனைவரும் உன் உறவினராகிறார்கள். உலகமனைத்தும் உங்களது வெளிப்பாடே, எல்லோரையும் சமமாக மதிக்க முடிகிறது. நீங்கள் ஆன்ம நிலையை அடையும் போது முழுமையான விரிவடைதல் நிகழ்கிறது. இதை உங்கள் ஆன்ம சக்தியால் உணர முடிகிறது. அமைதி , அடக்கம், பேரானந்த நிலை ஏற்படுகிறது. அதிக நேரம் தியானத்தில் இருக்க வேண்டியதில்லை. நீங்கள் எத்தனை நேரம் எடுத்துக் கொண்டாலும் , புறச்சுழளிளிருந்து, அறிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும். இந்த ஆன்மப் பிரதிபலிப்பை எவ்வாறு மற்றவர்களுக்கு செலுத்துவீர்கள். நீங்கள் பெரும் பேரானந்தத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். உங்களிடமிருந்து ஒளியாக மற்றவர்கட்கு செலுத்த வேண்டும். ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளக்கு ஒளி பெறுவது போல் எல்லோரையும் சென்று சேர்க்க வேண்டும்.



நீங்கள் பெற்ற பேரானந்தம் உங்களை சுற்றி இருப்பவர்களும் பெற வேண்டும் என்று தொடர்ந்து விருப்பம் கொள்ள வேண்டும். நீங்கள் ஆழ்நிலை தியானம் பெறும் போது உங்கள் கதிர்வீச்சு மற்றவர்கள் மீது அதிகமாக இருக்கும்.

------ மாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி

திங்கள், 30 மே, 2011

பவசாகரம்






தேவதை : ஆதிகுரு தத்தாத்ரேயா
ஸ்தூல வெளிப்பாடு : ஜீரணப் பகுதி
தன்மைகள் : சமநிலை, தர்மத்தின் வழி, மனஉறுதி, ஆளுமைத் தன்மை
கனிமம் : நெருப்பு, நீர்
இருப்பிடம்: கைவிரல் மேடுகள் ( உள்ளங்கையின் வெளிவட்டம்)
தடைகளுக்கான காரணங்கள் : ஆதிக்கம் செலுத்துதல், உண்மையற்ற கருத்துக்களை அழகாக வெளிப்படுத்துதல், பிளாக் மேஜிக் , சமயப் பிரச்சாரம், தவறான குரு, தவறான ஞானம்.
மானிட வர்க்கத்தின் பரிணாம வளர்சசியில் இன்றுவரை அறியாமைக்கும் , மாயைக்கும் இடையில் தொடர்ந்து போர் நடந்து கொண்டுள்ளது. இந்த அறியாமையை மனிதன் முதலில் விரட்ட வேண்டும். ஆன்மாவின் உண்மை நிலையை அனுபவிப்பதற்கு முன்னதாக இந்த அறியாமையை மனிதன் முதலில் வெற்றி கொள்ள வேண்டும்.
மாயையிடமிருந்து ஆன்மாவின் உண்மையை அறிந்து கொள்வதற்குமிடையே உள்ள இடைவெளியை கடினமாக போராடிக் கடக்க வேண்டும். இதை பவசாகரம் என்று அழைக்கிறோம்.
தன்மை
பவசாகரம் நமது ஞானத்தின் கருவூலம் எனலாம். இப்பகுதியில் நமது குண்டலினி சக்தி பிரகாசிக்கும் பொது நாம் நமக்கே குருவாக ஆகி விடுகிறோம். குரு என்பவர் மிகவும் கடினமானவர். அல்லது ஈர்ப்பு சக்தி கொண்டவர். புவிஈர்ப்பு காரணமாக தான் நாம் நேர்மையற்ற சூழ்நிலையிலும் சமநிலை அடைந்து விடுகிறோம். முடிவாக நமது உள்நோக்கும் உணர்வால் நமது வினாக்களுக்கு விடை கிடைத்து விடுகிறது. பல சந்தர்ப்பங்களில் பிரச்சனைகளுக்கு விடை காண முடிகிறது. நாம் நமக்கு குருவாக மாறிய பிறகு எது சரி எது தவறு என்பதை உள்ளிலிருந்து அறிய முடிகிறது. உண்மையான சீடர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளில் முக்கியமானது பணிவோடும் , திறந்த மனதோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது ஈர்ப்பு சக்தி வாய்ந்த குரு அறிவுரை கூறுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா காலங்களிலும் மிகவும் சிறந்து விளங்கிய குருக்கள் அடக்கமும் , எளிமையும் உடையவர்களாக இறைவனுக்கு சீடர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் தங்களது அகங்காரத்தை இறைவனிடம் சமர்ப்பித்து விடுகிறார்கள். அவர்கள் முழுமையான அதிகாரம் பெற்றவர்கள் ஆகிறார்கள். பிறருக்கும் கற்பிக்க முடிகிறது.

இது நேரடியாக நாபி சக்கரத்துடன் இணைந்திருப்பதால் தர்மத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடப்பது அவசியமாகிறது . எல்லா காலகட்டத்திலும் குருவாகவும், போதகர்களாகவும் இருந்து தங்களை சீடர்களாக வழி நடத்தி சென்றவர்கள் தர்மத்தை சூத்திரமாக கொண்டு தங்களது வாழ்க்கையில் பின்பற்றியும் வெந்தனர். பிறருக்கும் கற்பித்தனர். நாம் நல்ல மக்களையும் , மற்றவர்களையும் நிந்திக்காமலும் நிலையிழக்க செய்யாமலும், இயற்கையுடன் இணைந்து அதன் நியதிகளுக்கு உட்பட்டு வாழ முடிகிறது.

குரு, சீடர் தத்துவம் இந்தப் பகுதியில்தான் அமைந்துள்ளது. இதைப் புராணங்களில் லவா, குஷா, போன்றவர்களின் குணங்களிலிருந்து வெளிப்படுகின்றன. அதுபோல் மார்க்கண்டேயா, ஆதிசங்கராச்சாரியா, டேவிட், ஜான் பேட்ஸ்ட், புத்தா, மகாவீரா, கபீர்தாஸ், மைக்கேலாங்கலோ, கலில் கிப்ரான், வில்லியம் சேக்ஸ்பியர், வில்லியம் பிளேக் மற்றும் பலர்.

இந்த வழியில் வாழ்ந்த போதகர்கள் உலகின் பிற பகுதியில் மறு அவதாரம் எடுத்து முன்னோடிகள் செய்த தவறான போதனைகளிலிருந்து காப்பாற்றினார். முகமது நபி இந்த உலகில் பிறந்து அன்றையக் காட்டுமிராண்டி மக்களுக்கு தர்மத்தை போதித்தார். ஆனால் அவர்கள் அவரைக் கொடுமைப்படுத்தினர். முடிவில் மனம் வெறுத்து இது தான் கடைசி முறை போதகர் வருவது என சூளுரைத்தார். என்றாலும் அவரது இரக்கம் குப்பைத் தொட்டியில் நாய்களுக்கு தூக்கி எறியப்பட்டதைக் கண்டதும் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை போதிக்க குருநானக்காக அவதாரம் செய்தார். ஆனால் அவருடைய தொண்டர்கள் முகமதியர்களை வெறுக்கிறார்கள். அவர்களும் இவர்களை வெறுக்கிறார்கள். அதுபோலவே, ஆதிசங்கராச்சாரியா, கபீர்தாசராகவும் ஜனனம் எடுத்தார். அவர் முயற்சி செய்து அவரது தொண்டர்களை சடங்குகளிலிருந்தும் உருவ வழிபாடுகளிலிருந்தும் விடுவித்தார்.

மனித குலத்திற்கு வழிகாட்டியாக இருந்து உதாரண புருஷர்களாக வாழ்ந்து சென்ற குருமார்கள் பலர். இவர்கள் இருக்கும் இடம் பவசாகர சக்கரம்.




அதிதேவதை ஆதிகுரு தத்தாத்ரியேயர் மற்றும் ஆப்ரஹாம், மோசஸ் , லாவோட்சே , ஜனகர் , குருநானக், முகமது நபி, ஷீரடி சாய்நாத், கன்ப்யுசியஸ், சாக்ரட்டீஸ் ஆகிய போதகர்கள் ஆதிகுருமார்களாக இந்த சக்கரத்தில் அமைந்திருக்கிறார்கள். இவர்கள்தான் நமக்கு நேர்மையாக வாழும் வாழ்க்கை முறையும் தர்மத்தின் பாதையையும் காட்டியவர்கள். இதனால் அதர்ம வழியை சமுதாயத்தில் தடை செய்தவர்கள்.

ஸ்தூல வெளிப்பாடு:
பவசாகரம் என்பது குண்டலினிக்கும் வேகஸ் நரம்புக்கும் உள்ள இடைவெளி ஆகும். இது பரிணாம துவக்கத்திற்கும், இன்றைய மனிதகுல வளர்ச்சிக்கும் இடையிலுள்ள காலமும், இடைவெளியுமாகும். இது உணர்வுக்கும் பரி பூரணத்திற்கும் உள்ள இடைப்பட்ட வெற்றிடம் . நமது ஆன்மா சுயப்பிரகாச நிலை அடையாத நிலையில் இந்த வெற்றிடம் இருந்து கொண்டிருக்கும். பவசாகரம் நாபியை சுற்றிவரும் சுவாதிஸ்டானாவின் வெளிச்சுற்று பாதையாகும். இது சூரியன் மற்றும் சந்திர நாடிகளுடன் தொடர்புடைய இரண்டு மையங்களைக் கொண்டுள்ளது.

நாம் எப்போது நமது குரு தத்துவத்திலிருந்து விலகுகிறோமா அப்போது நமது ஜீரணசக்தி குறையும். இதை அறிந்து கொள்ளலாம். இதனால் வாந்தியும் , வயிற்றுவலியும் ஏற்பட வாய்ப்பு உண்டு. நாம் ஏதேனும் அதர்மமான வழியில் செயல்படும்போது அல்லது நமது உடலை அல்லது சூட்சும சக்திகளை தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் மாறுதல்களை இந்தப் பகுதியில் உணரலாம். சிலருக்கு பரீட்சைக்கு செல்வதற்கு முன் வயிற்றுப் பகுதியில் நரம்பு வலி ஏற்படுவதுண்டு. சிலருக்கு பரீட்சைக்கு செல்வதற்கு முன் வயிற்றுப் பகுதியில் நரம்பு வலி ஏற்படுவதுண்டு. இதுபோன்று சில உபாதைகள் நமது குரு தத்துவத்திற்கு சவாலாகின்றன.

இதுபோலவே , நாம் தவறான போதனைகளை அறிந்து கொள்ள முடிகிறது. நுண்ணதிர்வு பூர்வமான உணர்வும் இந்த அறிகுரிகளும்தான் நமக்கு, நாம் சரியான ஆத்மா விசாரத்தில் முன்னேருகிறோமோ அல்லது ஸ்தூல விஷயங்களில் ஈடுபட்டுள்ளோமா என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. நாம் நமது சுட்ஷுமா சரீரத்துடன் இவ்வாறு தொடர்பு கொள்ள முடிகிறது. இறுதியாக எது நமக்குத் துன்பத்தைத் தருகிறதோ அதை மறுத்து விட்டு எது நன்மை செய்கிறதோ அதைப் பின்பற்ற முடிகிறது. நமக்குள் இருக்கும் குரு தத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. இறைவனால் நமக்கு அருளப்பட்டது. ஆனால் நாம் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.

மதிப்பு மிகுந்த சக்தியாக நமககுள்ளிருப்பது குரு தத்துவம். எது சரி , எது தவறு என இது உணர்த்தும். இது நமக்குள் இருக்கும் நிலையான சக்தி ஆகும். இந்த சக்தியை பெற நமக்கு உரிமை இருக்கிறது. நமக்கு நாமே குருவாக ஆகிறோம். சிலர் பொருளீட்டும் நோக்கோடு , பொய்யான போதனைகளை உபதேசிக்கிறார்கள். இந்த தவறான போதனைகளை புரிந்து கொள்ள முடியும். தவறான குருவின் போதனைகளை கேட்டால் ஆவிகள் பீடிப்பு ஏற்படும். ஆன்மாவின் வெளிச்சத்தின் பாதை இதயத்திலிருந்து வெளிப்படுகிறது. ஆன்ம விசாரம் பூர்த்தி அடைகிறது.


சுத்திகரிப்பு :
I . கனிமங்களைப் பயன்படுத்தி,
* உப்பு நீரில் கால்களை அமிழ்த்து, தியானம் செய்தல்.
* மெழுகுவர்த்தியை பவசாகரத்தில் காண்பித்தல்.

II . உறுதிமொழி
* " அன்னையே , எனக்கு நானே, குரு. தாங்களே எனக்கு குரு. "
* பவசாகரம் மந்திரம் : குரு மந்திரம் _ பத்து குருக்களுக்கும் அல்லது ஏதேனும் ஒரு குருவின் மந்திரத்தையோக் கூறி தியானம் செய்ய வேண்டும்.

இதய செயல்முறைகள் :
* இடது கை அன்னையின் படத்தை நோக்கி வைத்துக் கொண்டு, வலது கை பவசாகரத்தில் வைத்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.
*காலனி அடிப்பு, உப்பு நீரில் கால்களை வைத்து சுத்திகரித்தல் போன்றவைகளை செய்யலாம்.
* ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டும். தினமும் தியானம் செய்ய வேண்டும்.

நாபி சக்கரம் ( மணி பூரகம் )








தேவதை : ஸ்ரீ லக்ஷ்மி விஷ்ணு
ஸ்தூலத் தன்மை : சோலார் பிளக்ஸ்சஸ்
வெளிப்பாடு : வயிற்றுப் பகுதி , குடல் பகுதி
தன்மைகள் : மனநிறைவு , திருப்தி , அமைதி , பெருந்தன்மை, தர்மம், நேர்மை, பரிணாமம்.
இதழ்கள் : 10
கைகள் : நடுவிரல்

தடைகளுக்கான காரணங்கள் :
மது அருந்துதல், உண்ணாநோன்பு , போதை மருந்து உண்பது, பிறரைப் பழிப்பது, பிடிவாதம், அசுத்தம், தவறான உணவு பழக்கம்.

இடது பக்க நாடி:

தேவதை : கிரஹலக்ஷ்மி
ஸ்துல வெளிப்பாடு : மண்ணீரல் , கணையம்
தன்மைகள் : குடும்ப உறவுகள், கணவன் மனைவி உறவு, இல்லத்தரசி, குடும்ப நிர்வாகம், விருந்தோம்பல், வீட்டின் தூய்மை.
கைகள் : இடது நடு விரல்

தடைகளுக்கான காரணங்கள் :
குடும்ப பிரச்சனை, தேவையற்ற வீட்டுக் கவலைகள், கணவன், மனைவி அடிமைப்படுத்திக் கொள்ளுதல்.

வலது பக்க நாடி:

தேவதை : ஸ்ரீ சேஷா , ராஜலக்ஷ்மி
ஸ்துல வெளிப்பாடு: கல்லீரல்
தன்மைகள் : கெளரவம், சித்தத்தின் தூய்மை
கைகள் : வலது நடு விரல்

தடைகளுக்கான காரணங்கள் :
கல்லிரலுக்கு கேடு விளைவிக்கும் உணவு பழக்கம்,

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இந்த சக்கரம் ஒரு திருப்பு முனை ஆகும். இந்த சக்கரத்தில் மனிதன் தனக்கென்று ஒரு இருப்பிடம் அல்லது ஒரு வீடு, குடும்பம் என அமைத்துக் கொள்கிறான். திருப்தியுடன் வாழ்ந்து வருகிறான். இது வெறும் இனப்பெருக்கத்திற்கான வடிகாலாக எடுத்துக் கொள்ள கூடாது . உண்மையில் நாம் ஆத்மா ஞானம் பெற்ற பின்பு நாம் எவ்வாறு தர்மத்தின் வழியில் செயல்படுகிறோம் என்பதை வயிற்று பகுதியில் கிடைக்கும் அதிர்வுகள் மூலமாக அறிய வரும். சிலர் ஆச்சரியபடுவார்கள். அதர்மமான வழியில் நாம் செயல்படும் போது இது நமக்கு எதிமறையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. உண்மை இது தான். ஒருவன் ஆன்மாவின் பூரணத்துவத்தை அனுபவிக்கும் போது, அவன் தர்மத்தின் வழியிலிருந்து தவறுவதில்லை. பரிணாம விதிகளின்படி , வளர்ச்சியும் , இனத் தொடர்ச்சியும் இயற்கையிலேயே நம்மிடம் தான் உள்ளது.
இந்த சக்கரத்தில் வழிப்படும் தேவதை ஸ்ரீ விஷ்ணு . காப்பவர். இவர்தான் தர்மத்தையும் காப்பவர். உயிர்களின் பரிணாம த்தை தொடர செய்பவர் . இந்த சக்கரத்தின் சக்தி முழுவதும் ஸ்ரீ லக்ஷ்மியிடம் உள்ளது. இவர்தான் நமக்கு செல்வத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறார்கள். இடது பக்கத்தில் கிரஹலக்ஷ்மி. இல்லத்திற்கான பெண் தெய்வம். மனைவி மதிக்கத் தக்கவள். கௌரவத்திற்கு ஆதாரமானவள். மனதிற்கு அமைதியைக் கொடுக்கும் தெய்வம். நமது தியானத்தின் மூலம் நாம் பெரும் ஆன்ம விழிப்புணர்வு இந்த தெய்வம் மூலம் தான் என்பது உண்மை.

ஸ்தூல வெளிப்பாடு :
இந்த சக்கரம் வயிற்றுப் பகுதியில் செயல்படுகிறது. வயிற்றுப்பகுதியில் செயல்கள் பாதிப்படைந்தால் உணவு ஜீரணிப்பது, உணவை பிரித்து அனுப்புவது போன்ற பணிகள் பாதிப்படைகிறது. ஆகவே வயிற்றுப்பகுதி மிகவும் முக்கியமானது. நாம் உண்ணும் உணவு பழக்கம் , உட்கொள்ளும் முறை ஆகியவைகளால் ஜீரண அமிலங்களும் , சுரப்பிகளும் பாதிப்படைகின்றன. நாம் மிகவும் விரைவாகவோ , கோபமாகவோ, கவலையுடனோ உணவை உட்கொள்ளும் போது சரியான முறையில் ஜீரனிக்கப்படுவதில்லை. வயிற்று தசை நார்கள் மிகவும் செயல் இழக்கப்பட்டு விடுவதன் காரணமாக ஜீரணம் தடை படுகிறது. நாம் சரிவிகித உணவை உண்ண வேண்டும். அப்போது தான் உணவு சரியாக முன்னேறி வயிற்றுப்பகுதியை அடையும். அங்கு ஜீரண சுரப்பிகளும் , அமிலங்களும் ஜீரனிக்கப்படும். நல்ல ஊட்ட சத்து கிடைக்க அமைதியாக உண்ண வேண்டும். தியானத்திற்கு ஆதாரமானது நாபி சக்கரமாகும். கல்லீரலைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. சித்தத்தை வீணாகப் பயன்படுத்தக் கூடாது. நாம் தேவையற்ற விஷயங்களில் அதிகமாக சித்தத்தை செலுத்துவதாலும் , சிந்திப்பதாலும், திட்டமிடுவதாலும் கல்லீரல் பலவீனம் அடைகிறது.
வலது பக்கம் இருக்கும் சக்கரம் பலவீனமடையக்கூடாது, இந்த பகுதி நமது லௌகீக சுகத்தைக் குறிக்கிறது. தவறான உணவுகளாலும், ஏமாற்றங்களாலும் மது பானம், எண்ணெய் பதார்த்தம் சேர்ப்பதாலும் , பாதிப்படைகிறது. இதனால் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் போகிறது. கல்லீரல் பாதிக்கப்படுவதால் அடிக்கடி எரிச்சல் , நிலையற்ற எண்ணங்கள் ஏற்படும். இடது பக்கம் உபாதைகள் ஏற்பட்டால் குடும்ப சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதை உணரலாம். ஆன்ம ஞானம் பெற்ற பின்பு இச்சக்கரத்தின் சக்தியை அறிய முடியும். தெய்வ சக்தி நம்மை பாது காக்கும். நமது பொறுப்புகளையும், கடமைகளையும், சந்திக்க நமக்கு நல்ல பத்தையும் இச்சக்கரம் கொடுக்கிறது. குடும்பம் தான் சமுதாயத்தின் முதன்மையான அங்கம். எனவே அதை சரியான முறையில் கவனிக்க வேண்டும். நல்ல அன்பும், மதிப்பும், ஒற்றுமையும் நிறைந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதிகப்படியான கவனம் உணவின் மீது இருக்கக்கூடாது. பட்டினியும் இருக்கக்கூடாது.

தன்மைகள் :
நிறைவு அல்லது திருப்தி என்பது மிகவும் முக்கியமானது. வெப்பம் நிறைந்த கல்லீரல் உடையவர்கள் இயற்கையில் அடிக்கடி எரிச்சல் கொண்டவர்கள். இவர்களுக்கு கவலை இல்லாத வாழ்க்கை வாழ முடியாது. இவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள். நமது ஆன்மா பிரகாசிக்கும் போது நாம் எல்லாவற்றையும், அவற்றின் உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். கவலை ஏற்படுவதில்லை. எண்ணங்கள் அற்ற நிலையில் தான் நாம் அமைதி பெற முடியும். நாம் திருப்திகரமாக இருக்க முடியும். மாறிவரும் நாகரீகத்திற்கு நமது ஆன்மா எந்த வகையிலும் சம்மந்தமில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த சக்கரத்தில் உறுதி மொழியாவது: " எனது ஆன்மாவில் நான் திருப்தி அடைந்தவனாக இருக்கிறேன்"
இந்த சக்கரம் சரீரம் மற்றும் பொருளாதார சம்மந்தமான நலம் குறித்த சக்கரம் எனலாம். மனிதன் தனது படைப்பாற்றலை வளர்த்துக் கொண்டு இயற்கை வளங்களை தந்து ஆதாயத்திற்கு பண்படுத்திக் கொள்கிறான். முன்னேற்றம் என்கிறது பரிணாம் வளர்ச்சியின் ஒரு படி. பணம் என்கிறது அத்தியாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான பொருள் கிட்டாத போது அவர்கள் தொடர்ந்து அதைத் தேடுவதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் நமது சரியான பத்தியிலிருந்து விலகியிருக்கிறோம். நாம் சரீரத்தாலும், புத்தியினாலும் எதையும் செயல்படுத்தும் வகையில் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நமது முன்னேற்றமும் தடைபடுவதில்லை.
வலது நாபியின் தன்மைகள் கல்லீரலை செயல்பட செய்வதாகும். இருப்பினும் சில சமயம் நாம் நம்மை இழந்து விடுகிறோம். அடிப்படைத் தேவைகளை மாற்றி திருப்தி அடையாத ஆசைகளை நாம் வளர்த்துக் கொள்கிறோம். இதுதான் பொருளைத் தேடும் வாழ்க்கையின் முதல்படி ஆகும். பணம் படைத்தவராக இருப்பதில் தவறு கிடையாது. பணத்தைத் தேக்கி வைப்பதால்தான் பிரச்சனை உருவாகிறது. பணத்தை சேர்ப்பதற்காக பணத்தை சம்பாதிப்பது தவறானது. பேராசை மனிதனுக்கு தடைக்கற்களாக அமைகிறது. வளர்ச்சியை துடுக்கிறது. கஞ்சத்தனம், பதுக்கல், ஆகியவை இயல்பான பணப் புழக்கத்தை தடை செய்கிறது. இந்த சுயநலமும் வளர்ச்சி அடையாத மனமும் , வாழ்க்கையின் அடிப்படையான உண்மையைப் புரிந்து கொள்வதில்லை. இயற்கையில் எல்லாம் சமநிலைப் பெறுகிறது. காரணம் இயற்கை என்பது ஒன்று தான். பணம் மட்டும் தனிப்பட்டதல்ல. இந்த சக்தி எல்லா உயிர்களுக்கும் தேவையானது. பகிர்ந்து கொள்ளும்போது நாம் கற்றுக் கொள்கிறோம். பெருந்தன்மையுடன் இருப்பது நமது முன்னேற்றம் எனலாம். ஆனால் பதுக்கல் தடையை ஏற்படுத்துகிறது. மனத்தில் தடையையும், எதிர்மறையான மனத்தையும் ஏற்படுத்துகிறது. சமுதாயத்தில் இவர்கள் பயங்கரமானவர்கள். சுயநலமும் பேராசையும் தான் இன்றைய மாசுப்பட்ட சமுதாயத்தை ஏற்படுத்தி உள்ளது. நமது ஆன்மீக வளர்ச்சி நாம் அடையும் திருப்தியில் தான் உள்ளது. நமது திருப்தி நமது பரந்த மனத்திலுள்ளது. பெருந்தன்மையுள்ளது. நாம் இதைப் பகிர்ந்து கொண்டால் நாம் தான் முதலில் இதன் பயனைப் பெறுவோம்.
நமது இல்லற வாழ்க்கை அமைதியாக நிரந்தரமாக அமைய உதவுவது இடது நாபியாகும். மனைவியை மதிக்காவிட்டால் பிரட்சனை உருவாகும். அமைதியும், திருப்தியும் நமக்குள் தருவது இடது நாபியாகும். இது நமக்குள் நிகழும் சுமுகமான, அமைதியான உணர்வு. இது நமது ஆன்ம விழிப்புணர்வுக்கும் சமமான ஆளுமைத் தன்மையின் வெளிப்பாட்டிற்கும் வகை செய்கிறது. அமைதிதான் நீது முன்னேற்றத்திற்கு முதன்மையானது. எல்லா நிலையிலும் ஆன்மீக உணர்வு நாபி சக்கரத்தில் பெற்றவுடன் இறுதியாக நலமாக இருத்தல் நமது அடிப்படையான நோக்கமாகும். லக்ஷ்மி தத்துவத்தை அடுத்து மேல்நிலைப் பெற முயலும் போத மகாலட்சுமி தத்துவம் செயல்படுகிறது.

தர்மம்:
நாபி சக்கரத்தில் மற்றொரு அம்சம் தர்மம். அதாவது நமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நடைமுறை. நமக்குள்ளே நாம் நிறைவை விரும்பினால் , நமக்கு வெளியே முதலில் நிறைவைக் காண வேண்டும். இதன் பொருள் நாம் நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும். இது செயற்கையான செயல்முறை . ஆன்ம ஞானத்திற்கு பின் இது இயற்கையிலேயே நமது கவனத்தின் மூலம் தெரிய வருகிறது. தர்மத்தை அழிக்க முடியாது. ஆனால் மாற்றலாம். ஒன்றோடு ஒன்று தர்ம நிலையை ஒப்பிட முடியாது. அடிப்படையில் எது சரி எது தவறு என்பதை அறிந்து கொள்ள முடியாது. தர்மம் என்பது பரிணாம வளர்ஸ்ரியின் கட்டுப்பாடு. இதன் மூலம் தான் அமீபாவிலிருந்து இந்த நிலை வரை வளர்ச்சி அடைந்துள்ளோம் . மிகவும் சக்தி வாய்ந்தது. தர்மத்தின் சட்டமாக 10 கட்டளைகள் பரிணாம வளர்ச்சியின் வழிகாட்டி எனலாம். யார் இந்த அடிப்படை தர்மத்தின் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு சக்தி வாய்ந்த, நிலையான தன்னுணர்வின் அனுபவம் ஏற்படும். உணவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவை உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உங்களை ஊட்டப்படுத்தும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தும். அவசியமில்லாமல் நோன்பு இருப்பது இந்த சக்கரத்தை பாதிக்கும். நாம் உண்ணா நோன்பு இருப்பதன் மூலம் ஆத்மஞானம் பெற முடியாது. நமது வயிற்றிற்கு சரியான முறைப்படி உணவு அளிக்க வேண்டும். மருத்துவரைக் கேட்டுப் பாருங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உண்ணா நோன்பு இருக்கலாம். ஆனால் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தேவையற்றது.
இதற்கு மாறாக உண்ணா நோன்பு காலத்தில் நமது கவனம் முழுவதும் உணவின் மீதுதான் இருக்கும். நமது உடல் உணவின் தேவையை உணரும்போது நமக்கு அறிவிப்பு கொடுக்கிறது. நாம் சிலவற்றை மறுக்கக் கூடாது. மது அருந்துதல், தவறான உணவுப் பழக்கம், நாபி சக்கரத்தை பாதிக்கும்.

சுத்திகரித்தல்:
I . கனிமத்தைப் பயன்படுத்தி ,
* மெழுகுவர்த்தியை வயிற்றுப்பகுதியில் காட்டுவது மிகவும் நல்லது.
* பாதங்களை உப்பு நீரில் அமிழ்த்து தியானம் செய்வது நல்லது.
* மூச்சை மெதுவாக இழுத்து விடும் பயிற்சி.
II . உறுதி மொழி :
" அன்னையே என்னைத் திருப்தி அடைந்தவனாக செய்யுங்கள் "

பொதுவான அறிவுரை :
நாபி சக்கரத்தின் முன்னும், பின்னும் தெய்வீக அதிர்வுகளைக் கொடுக்கவும்.
தெய்வீக அதிர்வுகளை பாய்ச்சிய தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
வயிற்றின் பின்பகுதியிலும் , வயிற்றுப் பகுதியிலும் தசைநார்களை , பிசைந்து விடவும்.
இடது நாபியை சுத்திகரித்தல்:

I . கனிமங்கள் :
* மெழுகுவர்த்தியை இடது வயிற்றுப் பகுதியில் காட்டவும்.
* பாதங்களை உப்பு நீரில் அமிழ்த்து தியானம் செய்வது நல்லது.

II . உறுதி மொழி :
* அன்னையே தங்களது கிருபையால் நான் திருப்தியடைந்தவனாக இருக்கிறேன்.
* அன்னையே தங்களது கிருபையால் நான் அமைதியுடன் இருக்கிறேன்.
* அன்னையே தங்களது கிருபையால் நான் பெருந்தன்மையுடையவனாக இருக்கிறேன்.

III . பொதுவான அறிவுரை :
* இடது நாபிக்கு அதிர்வுகளை தாருங்கள்.
* எல்லா தரப்பிலும் திருப்தி அடைய முயலுங்கள்.
* உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
* மங்கலத் தன்மை , பெருந்தன்மையை செயல்படுத்துங்கள்.
* கஞ்சத்தன்மையை விட்டுவிடுங்கள் .
* கணவன் , மனைவி உறவை வளப்படுத்துங்கள்.

வலது நாபியை சுத்திகரித்தல்:
I. கனிமங்களைப் பயன்படுத்தி:
குளிர்ந்த நீரில் பாதங்களை மூழ்க செய்து, தியானத்தின் மூலம் சுத்திகரிக்க செய்தல்.

II. உறுதிமொழி:
" அன்னையே உண்மையில் எனது பொருளாதாரம் மற்றும் குடும்பக் கவலைகளைத் தீர்த்து எனது நலனில் பொறுப்பு எடுத்துக் கொள்கிறீர்கள்."

III. பொதுவான அறிவுரை:
* கொழுப்பு சத்து நிறைந்த உணவும் அதிகமாக பதப்படுத்திய பால் கலந்த உணவு, பன்லங்க்களும் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
* கல்லிரலுக்கு உகந்த உணவுகளான கரும்பு, இஞ்சி, அரிசி, சிறுபருப்பு, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பனிக்கட்டியை வலது பக்கத்தில் கல்லீரல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
* இவைகள் எண்ணங்களற்ற நிலைக்கு செல்ல உதவும்.

திங்கள், 16 மே, 2011

சுவதிஸ்டானா சக்கரம்







தேவதை : ஸ்ரீ பிரம்மா தேவா சரஸ்வதி
ஸ்துல சரீரம் : அயோட்டிக் நரம்பு மையம்
வெளிப்பாடு : கல்லீரல் , சிறுநீரகம் , மண்ணீரல், கணையம்.
தன்மைகள் : படைப்பாற்றல், ஊக்கம், கலையுணர்வு, புத்தி கூர்மை, சித்தத்தின் அடித்தளம்.
இதழ்கள் : ஆறு
கனிமப் பொருள் : தீ
குறியீடு : டேவிட் நட்சத்திரம்
கைகளில் : பெருவிரல்
கால்களில் : மூன்றாவது விரல்

தடைகளுக்கான காரணங்கள் :
இடது : தேவைக்கு அதிகமான சமய சடங்கு , பிளாக் மேஜிக், தவறான குரு போதனை, மதுபானங்கள், போதை மருந்துகள், அடிமைத்தளம், ரகசிய உறவுகள், அதிகமாகக் கீழ்படிதல்.

வலது : அதிகமாக சிநிதித்தல், எதிர்காலத் திட்டமிடல், அரசியல் அராஜகம், தவறான உணவுப் பழக்கம், தன்னை அதிகமாக முன்னிலைப் படுத்துதல், அகந்தை (அகங்காரம்) ,
சுவதிஸ்டான சக்கரம் நாடி சக்கரத்திற்கு ஒரு செயற்கை கோள் போல் செயல்படுகிறது . இது பத்து இதழ்களுக்கு உயிர்ரோட்டமாக இருந்து வருகிறது. பத்து குருக்களின் பத்து கட்டளைகளை இது வெளிப்படுத்துகிறது.
குண்டலினி மேலே எழும் போது முதலில் நாபி சக்கரத்திர்க்குத் தான் சென்று அடைகிறது. அதன் பின் தொப்புள் கொடி வழியாக சுவதிஸ்டான சக்கரம் வந்து பிரகாசிக்க செய்து , மீண்டும் நாபி சக்கரத்தை நோக்கி தன் பிரயாணத்தைத் தொடர்கிறது. பரிணாம வளர்ச்சியில் மனிதன் தனது அடிப்படை தேவையான இருப்பிடத்தைத் தேடி கொண்டான். பிறகு அதுவே மாட மாளிகைகளைத் தேடுவதாக அமைந்து விட்டது. அவனது கலை உணர்வு அதிகரிக்க அதிகரிக்க அழகான கட்டிடங்கள் கலையுணர்வுடன் உருவாக்கத் தொடங்கினான். இந்த கலை உணர்வு ஒரு கற்பனையாக இருந்து , மனதில் எழும் எண்ணங்களின் உந்து சக்தியால் விளைவது, இதற்கு வெளிப்படையாக எந்த ஸ்தூல சக்தியும் , கிடையாது. இவ்வகை வெளிப்பாடே படைப்பாற்றல் திறன் எனலாம்.

தன்மைகள் :
இச்சக்கரத்தின் அடிப்படைத் தன்மை படைப்பாற்றல் ஆகும். இங்குதான் நமது படைப்பாற்றலின் சக்தி உருவாகிறது.
இது மூளையிலுள்ள அணுக்களுக்கு சக்தியைக் கொடுக்கிறது. கொழுப்பு அணுக்களிலிருந்து மூளை அணுக்களுக்கு ஊட்ட சக்தியை மாற்றி அனுப்புகிறது. ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு படைப்பாற்றலைப் பெறுவதற்கான 'சாவி' - ' எண்ணங்களற்ற நிலையே' . இது தியானத்தின் மூலமாக தான் அடைய முடியும்.

இயற்கை அழகின் தோற்றம் நமக்குள் அழகான குளமாக பிரதிப்பலிக்கிறது எனும் உண்மையை இவற்றிலிருந்து அறிய முடிகிறது. நாம் நமக்குள் இருக்கும் தடாகத்தை அறிந்து கொண்டால் , நாம் அந்த தாடகத்தின் வடிகாலாக மாற முடியும். இதை 'வேர்ட்ஸ் வொர்த் ' என்பவர் இதயம் எவற்றை கண்காணிக்கிறதோ அவற்றை பெறுகிறது என கூறுகிறார்.

படைப்பாற்றல் உருவாகும் செயல்முறை சுவதிஸ்டான சக்கரத்தில் தான் துவங்குகிறது. இந்த சக்கரத்தில் சம நிலையுடன் செயல்பட்டால் (சுழு முனை வழியாக) நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைந்துள்ளோம் எனலாம். ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற பின் ஏற்படும் படைப்பாற்றல் முழுமை அடைந்ததாகவும், பரிப்பூர்ணத்துவம் பெற்றதாகவும் இருக்கும். இதை பண்டைய கால வல்லுநர் ' மோஷார்ட்', மைக்கேலேங்கலோ', எழுதிய புத்தகத்திலிருந்து நாம் உணர முடியும்.

அவர்கள் பிறப்பிலேயே ஆன்ம ஞானம் பெற்றவர்கள். இது போன்ற கலை படைப்புகள் என்றும் அழியாது. அமரத்துவம் பெற்றது. இது மகிழ்ச்சியையும் , அழகும் தரக் கூடியது. இருப்பினும் இன்றைய காலத்தில் கலைஞன் தனது இதயத்தின் ஆழத்திலிருந்து ஏதேனும் கலைப் படைப்பினை செய்தப் பின்னர் , இதர படைப்புகள் தரமற்றதாக இருக்கும். மற்றவர்களை ஏமாற்றக் கூடிய வகையில் அமையும். இதற்கு அடிப்படை காரணம் அகங்காரம் எனலாம். கலைஞன் படைப்பில் வெற்றியடைவதற்கு மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது . பிங்கள நாடி அதிகமாக பயன்படுகிறது. இதனால் அகங்காரம் அதிகரிக்கிறது. இதன் வெப்பம் மூளையின் இடது பக்கம் சென்றடைந்து , பலூன் போன்று விரிவடைகிறது. இதன் விளைவாக வெறிக்கு காரணமான தெய்வீக உணர்வு மைய நாடி வழியாக இறங்குவது தடைப்படுகிறது. தெய்வீக ஷக்தி நீங்கிவிடுகிறது.
இதயத்திலிருக்கும் ஆன்மாதான் படைப்பு ஆற்றலுக்கு தேக்கமாக உள்ளது. மிக அதிகமாக சிந்திக்கும் பொது இந்த சக்கரமும் , பழுது அடைந்து சக்தி குறைந்து விடுகிறது. இதனால் நாடிகளின் சமநிலை பாதிக்கிறது. போட்டி மனப்பான்மை அதிகரிக்கும். இது அகங்காரத்தை மேலும் வலுக்கும். ஆகையால் இன்றைய சுழலில் பொதுவாக படைப்பாற்றல்கள் ஆதார சக்தி இழந்ததாகவும் ஆன்ம பலமற்றதாகவும் உள்ளது.
இந்த சக்கரத்திற்கு முன்னோடியான தேவதை ஸ்ரீ பிரம்ம தேவ சரஸ்வதி எனலாம். இவர் எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமானவர். இவரிடமுள்ள சக்தி ஸ்வருபம் சரஸ்வதி. இந்த சக்தியே சங்கீதத்திற்கும் , கலைக்குமுரிய தெய்வமாக கூறப்படுகிறது.
ஸ்தூல வெளிப்பாடு :
இந்த சக்கரத்தின் பணி மிகவும் முக்கியமானது. வயிற்று பகுதியிலிருக்கும் கொழுப்பு அணுக்களே கிரே அணுக்களாகவும் , வெள்ளை அணுக்களாகவும் பிரிக்கப் பட்டு மூளைக்கு அனுப்பபடுகிறது. ஆகவே சிந்திக்கும் ஆற்றலுக்கும் சக்தியை ஊட்டுவது இதன் பணியாகும். மிக அதிகமாக சிந்திப்பது, திட்டமிடுதலும் இந்த சக்கரத்தை சக்தி இழக்க செய்யும். இந்த சக்கரம் நாபி சக்கரத்துடன் இணைந்து கல்லீரலை செயல்பட வைக்கிறது. இந்த சக்கரத்தை அதிகமாக பயன்படுத்தும் பொது இதனுடன் தொடர்புடைய உறுப்புக்கள் கல்லீரல், கணையம், சிறுநீரகம், மண்ணீரல், கர்ப்பப்பை, போன்றவைகள் பாதிப்படையும். இந்த பாதிப்பு வலது கையின் கட்டை விரல், நடு விரல், போன்றவற்றில் அதிர்வு துடிப்புகளாக தெரிய வரும், அல்லது குத்துணர்வு மூலம் கைகளில் தெரிய வருகிறது.
கல்லிரலானது நமது கவனத்தின் அல்லது சித்தத்தின் இருப்பிடமாக உள்ளதால் அதற்கென்று தனி முக்கியத்துவம் உள்ளது. அகங்காரம் , மற்றும் மமகாரம் கூடிய நினைவுகளுடன் சேர்ந்து கவனத்தை குழப்பிக் கொள்ளக்கூடாது. சித்தம் என்பது பிற எண்ணங்கள் அற்ற ஒரு முகப்பட்ட நிலையாகும். நாம் வசந்த காலங்களில் மலர்களை காண்கிறோம் . நாம் தூய்மையான சித்தத்தை நிலை நிறுத்தி அழகை அனுபவிக்கின்றோம். அவற்றைக் கண்காணிக்கும் போது அதை பற்றி சிந்திக்கவும் செய்கின்றோம். சித்தத்திற்கு சார்புடைய எண்ணங்கள் கிடையாது. இது ஒரு தூய ஒரு முகப்பட்ட தூய எண்ணக் குவியல் , கண்காணித்தல், சாட்சி பாவம் என்றும் கூறலாம்.
சமநிலையிலுள்ள கல்லிரலானது நமது சித்தத்திற்கு சக்தியைத் தருகிறது. மேலும் அதிலுள்ள தூய்மையற்ற எண்ணங்களை நீக்கி தூய்மைப்படுத்துகிறது. இவ்வாறு துய்மைப்படுத்தப்பட்ட சித்தத்திலிருந்து நமது தியானத்திற்கு தேவையான அமைதி மற்றும் ஒரு நிலைப்பட்ட நிலை கிடைக்கிறது. அதிக வெப்பத்தினால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும் போது நமது சித்தத்தையும் பாதிக்கிறது. இதனால் நமது தியான சக்தியின் பலம் குறைகிறது.
சுவதிஸ்டான சக்கரத்தின் தடைகள்:
வலிமையற்ற சுவதிஸ்டான சக்கரத்தினால் பின் வரும் தடைகள் ஏற்படுகிறது.

1 .நீரழிவு நோய், இதய நோய், கோபம், இரத்த அழுத்தம் , சிறுநீரகக் குறைப்பாடுகள்

2 . ஆவிகளின் மீது ஆர்வம், பேய் கதைகள், வேண்டாத கட்டுரைகள் படித்தல், மந்திர தந்திரத்தில் ஆர்வம் ஆகிய செயல்களால் நமது மனம் கட்டுண்டு நமது மனம் ஆழ் நிலை உணர்வுக்கு சென்று விடுகிறது. இதனால் கூடுதலான சோம்பல், பய உணர்வு, எதிமறை உணர்வு, போன்றவைகளின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிறோம் .


வலது சுவதிஸ்டான சக்கரம் சுத்திகரித்தல் :
1 . கனிமத்தைப் பயன்படுத்துதல்:- ஒரு பாத்திரத்தில் கணுக்கால் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கல் உப்பு கையளவு போட்டு தியானத்தின் மூலம் எதிர்மறை சக்திகளை உப்புக் கரைசலில் இறக்க வேண்டும்.
2 . உறுதி மொழிகள் : " அன்னையே நான் எதுவும் செய்வதில்லை, உண்மையில் நீங்களே எல்லாவற்றையும் செய்கிறீர்கள்".
3 . பொதுவான அறிவுரை : இடது கையை இச்சக்கரத்தின் மீது வைத்துக் கொண்டு வலது கையை அன்னையின் படத்தை நோக்கி வைத்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.
இடது கையை அன்னையின் படத்தை நோக்கி வைத்துக் கொண்டு வலது கையினால் தெய்வீக அதிர்வுகளை இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு மாற்ற வேண்டும். 108 முறை செய்ய வேண்டும்.
கல்லிரலுக்கு வேண்டிய உணவை மட்டும் உண்ண வேண்டும்.

இடது சுவதிஸ்டான சக்கரம் சுத்திகரித்தல் :
1 . கனிமத்தைப் பயன்படுத்துதல்:- எரியும் மெழுகுவர்த்தியை பயன்படுத்தி சுத்திகரிக்கலாம். கற்பூரமும், ஓமமும் சுத்திகரிக்கலாம்.
2 . உறுதி மொழிகள் : " அன்னையே தங்களது கிருபையினால் தூய்மையான ஞானத்தைப் பெற்றேன். "

புதன், 11 மே, 2011

மூலாதார சக்கரம்





தேவதை : ஸ்ரீ கணேஷா

ஸ்தூல வெளிப்பாடு : கழிவு உறுப்புகள் , மலக்குடல் , பிறப்புறுப்புகள், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், பெல்விக் நரம்பு மையம்.

தன்மைகள் : மங்கலத் தன்மை , தாய்மை, தெய்வீக குழந்தை உள்ளம் , ஆத்மா ஞானம் , கற்பு .

இதழ்கள் 4

கனிமம் : பூமி, கரி

குறியீடு : சுவஸ்திக்

கைகளில் : உள்ளங்கை மேடு

தடைகளுக்கான காரணம் :

இடது : காமக்களியாட்டம், மந்தர - தந்திர , ஆவியுடன் பேசுதல்.

வலது : வெளி வேஷம் , அடிமைத்தனம் , அதிகமாக சுத்திகரித்தல்.

நடு : மடமை , அறியாமை .

மூலாதார சக்கரம் தூய்மைப்படும் போது குண்டலினி மாதா விடுபட்டு மேலெழும்புகிறது. ஆகவே இந்த சக்கரம் குண்டலினின் தூய்மை யையும் , மங்களத் தன்மையையும் பாதுக்காக்கிறது.
மூலாதார சக்கரம் மற்ற எல்லா சக்கரங்களுக்கும் வேர் போன்றதாகும்.குழந்தை உள்ளம் போல் மிகவும் தெளிவான சிந்தனையுடன், கள்ளம் கபடம் இல்லாமல் இருந்தால் மட்டுமே இது செயல்படும். சாதகன் தனது சுற்று சூழலால் பெறப்பட்ட அழுக்குகள் தேங்கி காம வெறி கொண்டவனாக வெளிப்படுத்தப்படுகிறான்.
மூலாதாரம் என்பது பூமி . எல்லா உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமானது. இந்த சக்கரம் சக்திகளை பெறும் போது, காந்த ஷக்தியாக வெளிப்படுகிறது. இந்த சக்தியை சாதகன் உணரலாம். மூலாதாரம் மிகவும் பலமாக இருப்பவர்கள் , தெளிவான சிந்தனை உடையவர்கள். இது குண்டலினி சக்திக்கு கீழிருந்து அந்த தெய்வீக சக்தியை காத்து வருகிறது.
சமஸ்கிருதத்தில் 'மூலா' என்றால் வேர் என்று பொருள். எனவே குண்டலினி சக்திக்கு ஆதாரமாகவும், சுட்ஷுமா சரீரத்தில் வேராகவும் அமைகிறது.

தன்மைகள் :
குழந்தை மனம் என்பது அடிப்படை தன்மையாகும். சுயநல நோக்கமில்லாமல் செய்யக்கூடிய செயல்கள் எனலாம். இது எல்லா குழந்தைகளுக்கும் உள்ள பொதுவான குணமாகும். இயற்கையின் வெளிப்பாடுகள் மலைகள், நீர்வீழ்ச்சிகள் , இயற்கைக் காட்சிகள் ஆகும். இவைகளைப் பற்றி குழந்தைகள் ஆர்வமுடன் கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். பரிபூரணமான ஞானத்தின் ஆணிவேர் குழந்தைத் தன்மை எனலாம். எல்லா நேர்மையான குணங்களுக்கும் ஆதாரமானது குழந்தை தன்மை என்னும் தெளிவான மனம்.

பண்பாட்டு த்தன்மை :
இச்ச்சக்கரத்திற்கு உரிய தேவதை ஸ்ரீ கணேஷா. யானைத் தலையைக் கொண்ட குழந்தை. இவர் குழந்தை உள்ளம் கொண்டவர். 'குண்டலினி' என்னும் கெளரி மாதாவை காவல் காத்து வருகிறார். இவர் தான் குண்டலினி மாதாவுக்கு தெரியப் படுத்தி விழிப்பு நிலை அடைய வைக்கிறார். இவருடைய கோபக்கனல் தான் வெப்பக்காற்றாக பரிவு நரம்பு மண்டலங்கள் மூலமாக எதிர் மறை சக்திகள் நுழையும் போது கைகளில் வெளிப்படுகிறது. எல்லா தடைகளையும் நீக்க கூடிய தெய்வமாக விளங்குகிறார். இவர் தான் எல்லாக் கணங்களுக்கும் அரசனாக இருந்து ஆட்சி செய்கிறார். சாதகர்கள் இத்தடைகளை நீக்கினால் தான் பரிபூரணத்துவம் பெற முடியும். கணேசரின் ஞானம் மிகவும் பரி பூரணமான ஞானமாகும். அறிவுகளுக்கு எல்லாம் இதயம் போன்றவர். (உண்மையான பொருளை அறிந்து கொள்ளும் திறன் ) கணேஷர் தெய்வ குழந்தை ஆதலால் விளையாட்டுத் தன்மையும், பேரானந்தமமும், கொண்ட குழந்தையாக விளங்குகிறார். மிகவும் ஆர்வம் கொண்டவராக வும், அன்பே வடிவானவராகவும் விளங்குகிறார்.
ஸ்தூல சரீரத் தன்மைகள் :
மூலாதாராவில் குண்டலினி ஷக்தி ஆதிசக்தியின் ஒரு துளி எனலாம் . மூலாதாரச் சக்கரம் பிறப்பு உறுப்பு கள் , கழிவு உறுப்புகள் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றன. இது சாதகரின் பாலுணர்வை வெளிப்படுத்தும் சக்கரம் எனலாம். பாலுணர்வு என்பது மிகவும் மென்மையானது. இது அன்பை வெளிப்படுத்தக் கூடிய ஸ்தூல சரீர உணர்வே ஆகும் . இதை திருமண பந்தத்தின் மூலம் புனிதத் தன்மையுடன் வெளிப்படுத்த வேண்டும் . பிறப்பு - இறப்பு இதன் மூலம் செயல்படுகிறது . சமநிலையற்ற பாலுணர்வு நம்மை அடிமைப்படுத்துகிறது. ஆன்ம தரிசனம் பெற்றவர்கள் சரியான சமநிலையில் கற்புடன் வாழ்க்கை நடத்த வேண்டும். எல்லா உயிர்களிலும் ஆதரப் பொருளாக விளங்குகிறது.

சுத்திகரிப்பு:
பழுதடைந்த மூலாதார சக்கரம் கீழ்கண்ட வகையில் செயல்படும். தெளிவில்லாத சிந்தனை, குறைவான ஞாபக ஷக்தி, மனதில் கவலை, நீண்ட கால வியாதிகள், மனோ வியாதிகள் , மூல வியாதிகள் , சிறுநீரகம் செயல் இழத்தல் போன்றவை .
கனிமங்களை பயன்படுத்தும் முறை :
தரை மீது அதிகமாக அமர வேண்டும். இடது கை இடது மூலாதார சக்கரத்தின் மீதும், வலது கை பூமியின் மீதும் வைத்து " த்வமேவ சாட்ஷாத் ஸ்ரீ நிர்மல் கணேஷ சாட்ஷாத் ஸ்ரீ ஆதி ஷக்தி மாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி நமோ நமோஹா ".
உப்பு கரைத்த நீரில் நின்று எல்லா சக்கரங்களுக்கான மந்திரங்களை சொல்லி எதிர்மறை சக்திகளை தண்ணீரில் இறக்க வேண்டும். இறுதியாக சகஸ்ராரத்தில் சில நிமிடம் தியானம் செய்ய வேண்டும்.

உறுதி மொழி :
அருள்மிகு அன்னையே குழந்தை உள்ளத்தையும் , ஞானத்தையும் கொடுத்து அருள்புரிய வேண்டுகிறோம்.

செவ்வாய், 10 மே, 2011

சூட்சும சரீரம்


சூட்சும சரீரம் என்பது இட நாடி, பிங்கள நாடி, சுழுமுனை நாடி மற்றும் சக்கரங்கள் சேர்ந்ததாகும்.



இட நாடி
இது சந்திர நாடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாடி இடது பக்கம் மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா சக்கரம் வரை இடது பரிவு மண்டலத்தில் செயல்படுகிறது. ஆக்ஞா வழியாக குறுக்கு வாட்டில் சென்று மூளையின் மறு பக்கத்தில் பலூன் போன்று விரிவடையும். இது மமகாரம் என்று அழைக்கப்படுகிறது.
இது இச்சா சக்தியாக விளங்குகிறது. சாதகனின் விருப்பத்தை குறிக்கிறது. இது இறந்த கால நினைவுகளை வெளிப்படுத்தும்.
இதன் தேவதை மகாகாளி பைரவர் ஆகும்.
சோம்பல், மமகாரம், மூடநம்பிக்கை, மந்திரம், தந்திரம், பிளாக் மேஜிக், மோக வெறியாட்டம், குற்றவுணர்வு, குழந்தையின் மீது அளவிற்கு மீறிய பற்றுதல் போதை பொருட்கள் பயன்படுத்துதல், ஆவிகளுடன் பேசுதல், தன்னம்பிக்கை இழத்தல், உணர்வுகளுக்கு அடிமையாதல், ஆகியவைகளை நாடிகளின் எதிர்மறை செயல்பாடுகள்.

ஸ்தூல வெளிப்பாடுகள்
குளிர்ச்சியானது. அமாவாசை - ஆழ்மனம். ஆவிகளின் சஞ்சாரம், ரகசிய செயல்பாடுகள் , நிலையற்ற எண்ணங்கள் , இரவு காலம், சாதகரின் அனுபவங்கள், கபம் , தமோ குணம். நீல நிறம்.


பிங்கள நாடி

இது சூரிய நாடி. இந்த நாடிக்குரிய தேவதை மஹா சரஸ்வதி ஹனுமனா. இது சுவாதிஸ்டான சக்கரத்திலிருந்து ஆக்ஞா வழியாக இடது பக்க மூளைக்கு சென்று அடைகிறது. அங்கு பலூனைப் போன்று அகங்காரம் விரிவடைகிறது.
இது செயல்களுக்கான சக்தியாகும். இது கிரியா சக்தி ஆகும்.
மனதின் அகங்காரம், முரட்டு தன்மை வன்முறை , முன்னிலைப்படுத்திக் கொள்ளுதல், உணர்ச்சி வசப்படுதல், தந்திரப் புத்தி, சுரண்டுதல் ஆகியவை நாடிகளின் எதிர் மறை செயல்பாடுகள் .
ஸ்தூல வெளிப்பாடுகள்:
பவுர்ணமி , பகல் காலம் , போட்டி மனப்பான்மை, எதிர் காலம், பித்தம் , போலித்தன்மை , ரஜோகுணம் , மஞ்சள் நிறம்


சுழுமுனை நாடி:

இது பரிவு நரம்பின் மைய மண்டலமாகும். மூலாதாரத்திலிருந்து சஹாஸ்ரரா வரையில் இந்த நாடி செயல்படுகிறது . இது சத்வ குணத்தை குறிக்கிறது. உயிர்களின் பரிணாம சக்தியை விரட்டா ரூபத்தில் வெளிப்படுத்துகிறது. இந்த நாடியை பாதுகாக்கிற தேவதை மகாலட்சுமி.


ஸ்தூல சரீரத்தில் ஏழு சக்தி மையங்கள் உள்ளன. இந்த சக்தி மையங்களை சக்கரங்கள் என அழைக்கின்றோம் . இது சக்கரங்கள் போல் சரீரம், புத்தி, மனம், காரண சரீரம் , ஆன்மா ஆகிய நிலையில் சுழன்று கொண்டு இருக்கின்றன. காந்த சக்தி போன்ற இந்த சுழற்சி குறுக்கிலும் , நெடுக்கிலும் வலப்பக்கமாக அமைகிறது. எல்லா சக்கரங்களிலும் குறிப்பிட்ட அலைவரிசையில் செயல்படுகிறது.
ஏழு வகையான சக்கரங்கள் நமது உடலில் அமைந்துள்ளன. ஒவ்வொரு சக்கரமும் நுண் அதிர்வுகளை வெளிப்படுத்துகிறது. எவ்வாறு சக்கரங்கள் தடைப்படுகிறது என்பதை தெய்வீக நுண் அதிர்வுகள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். சக்கரம் சம்மந்தப்பட்ட எண்ணங்களும், செயல்களும் அதிர்வுகளை மாற்றுகிறது.

1 . மூலாதார சக்கரம்
2 . சுவாதிஸ்டான சக்கரம்
3 . நாபி அல்லது மணிப்பூரகம் சக்கரம்
4 . அனாஹ்த சக்கரம்
5 . விஷுத்தி சக்கரம்
6 . ஆக்ஞா சக்கரம்
7 . சஹஸ்ரார சக்கரம் .