Translate

திங்கள், 13 மே, 2013

சஹஜயோகிகள் எனப்படுபவர்கள் யார்?




1. சஹஜயோகிகள் எனப்படுபவர்கள் ஆத்மா விழிப்புணர்வினைப் பெற்றுக் கொண்டதன் வாயிலாக தம்மை இறை பக்தியுடன் இணைத்து இறைவனால் புத்தொளிர்விக்கப்பட்டவர்கள் ஆவர். 

2. இருப்பினும் எல்லாம் வல்ல பரம்பொருளின் பரந்து விரிந்துள்ள தெய்வீக நுண்ணதிர்வுகளை உணரும் ஆற்றலைப் பெற்று கொள்ளும்வரை அவர்கள் சஹஜயோகிகள் என்னும் அந்தஸ்தினைப் பெற மாட்டார்கள்.

3. குண்டலினி சக்தியினைப் பற்றியும் அவர்களது உள்ளார்ந்தவற்றைப் பற்றியும் போதிய ஞானம் பெற்றுக் கொள்ளாதவரை அவர்கள் சஹஜயோகிகள் ஆக கணிக்கப்பட மாட்டார்கள்.

4. எல்லாம் வல்ல பரம் பொருளின் இவ்விரிவடைந்த நுண் அதிர்வுகள் ஆனது அவர்களுள் எப்போதும் பாய்ந்தும் கொண்டிருப்பதை அவர்கள் உணர முடியும். அதன் பாய்ச்சல்  தடை பெறும் சந்தர்ப்பங்களில் குண்டலினியை மீண்டும் தட்டி எழுப்புவதன் மூலமாக மீண்டும் இறை இணைப்பை எப்படி பெற முடியும் என்பது பற்றிய ஞானத்தைப் பெற்றிருப்பதுடன் எப்போதும் இறை இணைப்பு பெற்றிருப்பதுடன் எப்போதும் இறை இணைப்பு பெற்று இருப்பதுடன் எப்போதும் இறை இணைப்பு பெற்று இருப்பவர்களாக இருப்பார்கள்.

5. அவர்கள் அவர்களின் உடலின் உள்ளார்ந்த விஷயங்கள் தொடர்பான பரிபூரண ஞானத்தைக் கொண்டிருப்பதுடன் மற்றவர்களின் உடல், மனம் முதலிய அனைத்து உள்ளார்ந்த விஷயங்கள் பற்றிய ஞானத்தையும் கொண்டிருப்பார்கள்.

6. குறைந்த பட்சமாக மற்றவர்களின் குண்டலினியை உயர்த்துவதன் மூலம் அவர்களின் ஆத்ம விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆற்றலை பெற்றிருப்பர்.