Translate

திங்கள், 30 மே, 2011

நாபி சக்கரம் ( மணி பூரகம் )








தேவதை : ஸ்ரீ லக்ஷ்மி விஷ்ணு
ஸ்தூலத் தன்மை : சோலார் பிளக்ஸ்சஸ்
வெளிப்பாடு : வயிற்றுப் பகுதி , குடல் பகுதி
தன்மைகள் : மனநிறைவு , திருப்தி , அமைதி , பெருந்தன்மை, தர்மம், நேர்மை, பரிணாமம்.
இதழ்கள் : 10
கைகள் : நடுவிரல்

தடைகளுக்கான காரணங்கள் :
மது அருந்துதல், உண்ணாநோன்பு , போதை மருந்து உண்பது, பிறரைப் பழிப்பது, பிடிவாதம், அசுத்தம், தவறான உணவு பழக்கம்.

இடது பக்க நாடி:

தேவதை : கிரஹலக்ஷ்மி
ஸ்துல வெளிப்பாடு : மண்ணீரல் , கணையம்
தன்மைகள் : குடும்ப உறவுகள், கணவன் மனைவி உறவு, இல்லத்தரசி, குடும்ப நிர்வாகம், விருந்தோம்பல், வீட்டின் தூய்மை.
கைகள் : இடது நடு விரல்

தடைகளுக்கான காரணங்கள் :
குடும்ப பிரச்சனை, தேவையற்ற வீட்டுக் கவலைகள், கணவன், மனைவி அடிமைப்படுத்திக் கொள்ளுதல்.

வலது பக்க நாடி:

தேவதை : ஸ்ரீ சேஷா , ராஜலக்ஷ்மி
ஸ்துல வெளிப்பாடு: கல்லீரல்
தன்மைகள் : கெளரவம், சித்தத்தின் தூய்மை
கைகள் : வலது நடு விரல்

தடைகளுக்கான காரணங்கள் :
கல்லிரலுக்கு கேடு விளைவிக்கும் உணவு பழக்கம்,

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இந்த சக்கரம் ஒரு திருப்பு முனை ஆகும். இந்த சக்கரத்தில் மனிதன் தனக்கென்று ஒரு இருப்பிடம் அல்லது ஒரு வீடு, குடும்பம் என அமைத்துக் கொள்கிறான். திருப்தியுடன் வாழ்ந்து வருகிறான். இது வெறும் இனப்பெருக்கத்திற்கான வடிகாலாக எடுத்துக் கொள்ள கூடாது . உண்மையில் நாம் ஆத்மா ஞானம் பெற்ற பின்பு நாம் எவ்வாறு தர்மத்தின் வழியில் செயல்படுகிறோம் என்பதை வயிற்று பகுதியில் கிடைக்கும் அதிர்வுகள் மூலமாக அறிய வரும். சிலர் ஆச்சரியபடுவார்கள். அதர்மமான வழியில் நாம் செயல்படும் போது இது நமக்கு எதிமறையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. உண்மை இது தான். ஒருவன் ஆன்மாவின் பூரணத்துவத்தை அனுபவிக்கும் போது, அவன் தர்மத்தின் வழியிலிருந்து தவறுவதில்லை. பரிணாம விதிகளின்படி , வளர்ச்சியும் , இனத் தொடர்ச்சியும் இயற்கையிலேயே நம்மிடம் தான் உள்ளது.
இந்த சக்கரத்தில் வழிப்படும் தேவதை ஸ்ரீ விஷ்ணு . காப்பவர். இவர்தான் தர்மத்தையும் காப்பவர். உயிர்களின் பரிணாம த்தை தொடர செய்பவர் . இந்த சக்கரத்தின் சக்தி முழுவதும் ஸ்ரீ லக்ஷ்மியிடம் உள்ளது. இவர்தான் நமக்கு செல்வத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறார்கள். இடது பக்கத்தில் கிரஹலக்ஷ்மி. இல்லத்திற்கான பெண் தெய்வம். மனைவி மதிக்கத் தக்கவள். கௌரவத்திற்கு ஆதாரமானவள். மனதிற்கு அமைதியைக் கொடுக்கும் தெய்வம். நமது தியானத்தின் மூலம் நாம் பெரும் ஆன்ம விழிப்புணர்வு இந்த தெய்வம் மூலம் தான் என்பது உண்மை.

ஸ்தூல வெளிப்பாடு :
இந்த சக்கரம் வயிற்றுப் பகுதியில் செயல்படுகிறது. வயிற்றுப்பகுதியில் செயல்கள் பாதிப்படைந்தால் உணவு ஜீரணிப்பது, உணவை பிரித்து அனுப்புவது போன்ற பணிகள் பாதிப்படைகிறது. ஆகவே வயிற்றுப்பகுதி மிகவும் முக்கியமானது. நாம் உண்ணும் உணவு பழக்கம் , உட்கொள்ளும் முறை ஆகியவைகளால் ஜீரண அமிலங்களும் , சுரப்பிகளும் பாதிப்படைகின்றன. நாம் மிகவும் விரைவாகவோ , கோபமாகவோ, கவலையுடனோ உணவை உட்கொள்ளும் போது சரியான முறையில் ஜீரனிக்கப்படுவதில்லை. வயிற்று தசை நார்கள் மிகவும் செயல் இழக்கப்பட்டு விடுவதன் காரணமாக ஜீரணம் தடை படுகிறது. நாம் சரிவிகித உணவை உண்ண வேண்டும். அப்போது தான் உணவு சரியாக முன்னேறி வயிற்றுப்பகுதியை அடையும். அங்கு ஜீரண சுரப்பிகளும் , அமிலங்களும் ஜீரனிக்கப்படும். நல்ல ஊட்ட சத்து கிடைக்க அமைதியாக உண்ண வேண்டும். தியானத்திற்கு ஆதாரமானது நாபி சக்கரமாகும். கல்லீரலைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. சித்தத்தை வீணாகப் பயன்படுத்தக் கூடாது. நாம் தேவையற்ற விஷயங்களில் அதிகமாக சித்தத்தை செலுத்துவதாலும் , சிந்திப்பதாலும், திட்டமிடுவதாலும் கல்லீரல் பலவீனம் அடைகிறது.
வலது பக்கம் இருக்கும் சக்கரம் பலவீனமடையக்கூடாது, இந்த பகுதி நமது லௌகீக சுகத்தைக் குறிக்கிறது. தவறான உணவுகளாலும், ஏமாற்றங்களாலும் மது பானம், எண்ணெய் பதார்த்தம் சேர்ப்பதாலும் , பாதிப்படைகிறது. இதனால் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் போகிறது. கல்லீரல் பாதிக்கப்படுவதால் அடிக்கடி எரிச்சல் , நிலையற்ற எண்ணங்கள் ஏற்படும். இடது பக்கம் உபாதைகள் ஏற்பட்டால் குடும்ப சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதை உணரலாம். ஆன்ம ஞானம் பெற்ற பின்பு இச்சக்கரத்தின் சக்தியை அறிய முடியும். தெய்வ சக்தி நம்மை பாது காக்கும். நமது பொறுப்புகளையும், கடமைகளையும், சந்திக்க நமக்கு நல்ல பத்தையும் இச்சக்கரம் கொடுக்கிறது. குடும்பம் தான் சமுதாயத்தின் முதன்மையான அங்கம். எனவே அதை சரியான முறையில் கவனிக்க வேண்டும். நல்ல அன்பும், மதிப்பும், ஒற்றுமையும் நிறைந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதிகப்படியான கவனம் உணவின் மீது இருக்கக்கூடாது. பட்டினியும் இருக்கக்கூடாது.

தன்மைகள் :
நிறைவு அல்லது திருப்தி என்பது மிகவும் முக்கியமானது. வெப்பம் நிறைந்த கல்லீரல் உடையவர்கள் இயற்கையில் அடிக்கடி எரிச்சல் கொண்டவர்கள். இவர்களுக்கு கவலை இல்லாத வாழ்க்கை வாழ முடியாது. இவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள். நமது ஆன்மா பிரகாசிக்கும் போது நாம் எல்லாவற்றையும், அவற்றின் உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். கவலை ஏற்படுவதில்லை. எண்ணங்கள் அற்ற நிலையில் தான் நாம் அமைதி பெற முடியும். நாம் திருப்திகரமாக இருக்க முடியும். மாறிவரும் நாகரீகத்திற்கு நமது ஆன்மா எந்த வகையிலும் சம்மந்தமில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த சக்கரத்தில் உறுதி மொழியாவது: " எனது ஆன்மாவில் நான் திருப்தி அடைந்தவனாக இருக்கிறேன்"
இந்த சக்கரம் சரீரம் மற்றும் பொருளாதார சம்மந்தமான நலம் குறித்த சக்கரம் எனலாம். மனிதன் தனது படைப்பாற்றலை வளர்த்துக் கொண்டு இயற்கை வளங்களை தந்து ஆதாயத்திற்கு பண்படுத்திக் கொள்கிறான். முன்னேற்றம் என்கிறது பரிணாம் வளர்ச்சியின் ஒரு படி. பணம் என்கிறது அத்தியாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான பொருள் கிட்டாத போது அவர்கள் தொடர்ந்து அதைத் தேடுவதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் நமது சரியான பத்தியிலிருந்து விலகியிருக்கிறோம். நாம் சரீரத்தாலும், புத்தியினாலும் எதையும் செயல்படுத்தும் வகையில் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நமது முன்னேற்றமும் தடைபடுவதில்லை.
வலது நாபியின் தன்மைகள் கல்லீரலை செயல்பட செய்வதாகும். இருப்பினும் சில சமயம் நாம் நம்மை இழந்து விடுகிறோம். அடிப்படைத் தேவைகளை மாற்றி திருப்தி அடையாத ஆசைகளை நாம் வளர்த்துக் கொள்கிறோம். இதுதான் பொருளைத் தேடும் வாழ்க்கையின் முதல்படி ஆகும். பணம் படைத்தவராக இருப்பதில் தவறு கிடையாது. பணத்தைத் தேக்கி வைப்பதால்தான் பிரச்சனை உருவாகிறது. பணத்தை சேர்ப்பதற்காக பணத்தை சம்பாதிப்பது தவறானது. பேராசை மனிதனுக்கு தடைக்கற்களாக அமைகிறது. வளர்ச்சியை துடுக்கிறது. கஞ்சத்தனம், பதுக்கல், ஆகியவை இயல்பான பணப் புழக்கத்தை தடை செய்கிறது. இந்த சுயநலமும் வளர்ச்சி அடையாத மனமும் , வாழ்க்கையின் அடிப்படையான உண்மையைப் புரிந்து கொள்வதில்லை. இயற்கையில் எல்லாம் சமநிலைப் பெறுகிறது. காரணம் இயற்கை என்பது ஒன்று தான். பணம் மட்டும் தனிப்பட்டதல்ல. இந்த சக்தி எல்லா உயிர்களுக்கும் தேவையானது. பகிர்ந்து கொள்ளும்போது நாம் கற்றுக் கொள்கிறோம். பெருந்தன்மையுடன் இருப்பது நமது முன்னேற்றம் எனலாம். ஆனால் பதுக்கல் தடையை ஏற்படுத்துகிறது. மனத்தில் தடையையும், எதிர்மறையான மனத்தையும் ஏற்படுத்துகிறது. சமுதாயத்தில் இவர்கள் பயங்கரமானவர்கள். சுயநலமும் பேராசையும் தான் இன்றைய மாசுப்பட்ட சமுதாயத்தை ஏற்படுத்தி உள்ளது. நமது ஆன்மீக வளர்ச்சி நாம் அடையும் திருப்தியில் தான் உள்ளது. நமது திருப்தி நமது பரந்த மனத்திலுள்ளது. பெருந்தன்மையுள்ளது. நாம் இதைப் பகிர்ந்து கொண்டால் நாம் தான் முதலில் இதன் பயனைப் பெறுவோம்.
நமது இல்லற வாழ்க்கை அமைதியாக நிரந்தரமாக அமைய உதவுவது இடது நாபியாகும். மனைவியை மதிக்காவிட்டால் பிரட்சனை உருவாகும். அமைதியும், திருப்தியும் நமக்குள் தருவது இடது நாபியாகும். இது நமக்குள் நிகழும் சுமுகமான, அமைதியான உணர்வு. இது நமது ஆன்ம விழிப்புணர்வுக்கும் சமமான ஆளுமைத் தன்மையின் வெளிப்பாட்டிற்கும் வகை செய்கிறது. அமைதிதான் நீது முன்னேற்றத்திற்கு முதன்மையானது. எல்லா நிலையிலும் ஆன்மீக உணர்வு நாபி சக்கரத்தில் பெற்றவுடன் இறுதியாக நலமாக இருத்தல் நமது அடிப்படையான நோக்கமாகும். லக்ஷ்மி தத்துவத்தை அடுத்து மேல்நிலைப் பெற முயலும் போத மகாலட்சுமி தத்துவம் செயல்படுகிறது.

தர்மம்:
நாபி சக்கரத்தில் மற்றொரு அம்சம் தர்மம். அதாவது நமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நடைமுறை. நமக்குள்ளே நாம் நிறைவை விரும்பினால் , நமக்கு வெளியே முதலில் நிறைவைக் காண வேண்டும். இதன் பொருள் நாம் நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும். இது செயற்கையான செயல்முறை . ஆன்ம ஞானத்திற்கு பின் இது இயற்கையிலேயே நமது கவனத்தின் மூலம் தெரிய வருகிறது. தர்மத்தை அழிக்க முடியாது. ஆனால் மாற்றலாம். ஒன்றோடு ஒன்று தர்ம நிலையை ஒப்பிட முடியாது. அடிப்படையில் எது சரி எது தவறு என்பதை அறிந்து கொள்ள முடியாது. தர்மம் என்பது பரிணாம வளர்ஸ்ரியின் கட்டுப்பாடு. இதன் மூலம் தான் அமீபாவிலிருந்து இந்த நிலை வரை வளர்ச்சி அடைந்துள்ளோம் . மிகவும் சக்தி வாய்ந்தது. தர்மத்தின் சட்டமாக 10 கட்டளைகள் பரிணாம வளர்ச்சியின் வழிகாட்டி எனலாம். யார் இந்த அடிப்படை தர்மத்தின் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு சக்தி வாய்ந்த, நிலையான தன்னுணர்வின் அனுபவம் ஏற்படும். உணவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவை உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உங்களை ஊட்டப்படுத்தும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தும். அவசியமில்லாமல் நோன்பு இருப்பது இந்த சக்கரத்தை பாதிக்கும். நாம் உண்ணா நோன்பு இருப்பதன் மூலம் ஆத்மஞானம் பெற முடியாது. நமது வயிற்றிற்கு சரியான முறைப்படி உணவு அளிக்க வேண்டும். மருத்துவரைக் கேட்டுப் பாருங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உண்ணா நோன்பு இருக்கலாம். ஆனால் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தேவையற்றது.
இதற்கு மாறாக உண்ணா நோன்பு காலத்தில் நமது கவனம் முழுவதும் உணவின் மீதுதான் இருக்கும். நமது உடல் உணவின் தேவையை உணரும்போது நமக்கு அறிவிப்பு கொடுக்கிறது. நாம் சிலவற்றை மறுக்கக் கூடாது. மது அருந்துதல், தவறான உணவுப் பழக்கம், நாபி சக்கரத்தை பாதிக்கும்.

சுத்திகரித்தல்:
I . கனிமத்தைப் பயன்படுத்தி ,
* மெழுகுவர்த்தியை வயிற்றுப்பகுதியில் காட்டுவது மிகவும் நல்லது.
* பாதங்களை உப்பு நீரில் அமிழ்த்து தியானம் செய்வது நல்லது.
* மூச்சை மெதுவாக இழுத்து விடும் பயிற்சி.
II . உறுதி மொழி :
" அன்னையே என்னைத் திருப்தி அடைந்தவனாக செய்யுங்கள் "

பொதுவான அறிவுரை :
நாபி சக்கரத்தின் முன்னும், பின்னும் தெய்வீக அதிர்வுகளைக் கொடுக்கவும்.
தெய்வீக அதிர்வுகளை பாய்ச்சிய தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
வயிற்றின் பின்பகுதியிலும் , வயிற்றுப் பகுதியிலும் தசைநார்களை , பிசைந்து விடவும்.
இடது நாபியை சுத்திகரித்தல்:

I . கனிமங்கள் :
* மெழுகுவர்த்தியை இடது வயிற்றுப் பகுதியில் காட்டவும்.
* பாதங்களை உப்பு நீரில் அமிழ்த்து தியானம் செய்வது நல்லது.

II . உறுதி மொழி :
* அன்னையே தங்களது கிருபையால் நான் திருப்தியடைந்தவனாக இருக்கிறேன்.
* அன்னையே தங்களது கிருபையால் நான் அமைதியுடன் இருக்கிறேன்.
* அன்னையே தங்களது கிருபையால் நான் பெருந்தன்மையுடையவனாக இருக்கிறேன்.

III . பொதுவான அறிவுரை :
* இடது நாபிக்கு அதிர்வுகளை தாருங்கள்.
* எல்லா தரப்பிலும் திருப்தி அடைய முயலுங்கள்.
* உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
* மங்கலத் தன்மை , பெருந்தன்மையை செயல்படுத்துங்கள்.
* கஞ்சத்தன்மையை விட்டுவிடுங்கள் .
* கணவன் , மனைவி உறவை வளப்படுத்துங்கள்.

வலது நாபியை சுத்திகரித்தல்:
I. கனிமங்களைப் பயன்படுத்தி:
குளிர்ந்த நீரில் பாதங்களை மூழ்க செய்து, தியானத்தின் மூலம் சுத்திகரிக்க செய்தல்.

II. உறுதிமொழி:
" அன்னையே உண்மையில் எனது பொருளாதாரம் மற்றும் குடும்பக் கவலைகளைத் தீர்த்து எனது நலனில் பொறுப்பு எடுத்துக் கொள்கிறீர்கள்."

III. பொதுவான அறிவுரை:
* கொழுப்பு சத்து நிறைந்த உணவும் அதிகமாக பதப்படுத்திய பால் கலந்த உணவு, பன்லங்க்களும் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
* கல்லிரலுக்கு உகந்த உணவுகளான கரும்பு, இஞ்சி, அரிசி, சிறுபருப்பு, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பனிக்கட்டியை வலது பக்கத்தில் கல்லீரல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
* இவைகள் எண்ணங்களற்ற நிலைக்கு செல்ல உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக