Translate

வெள்ளி, 10 ஜூன், 2011

ஆக்ஞா சக்கரம்





தேவதை : ஸ்ரீ இயேசு கிருஸ்து

ஸ்தூல வெளிப்பாடு : ஹைபோ தலமஸ் (பீனியல் மற்றும் பிட்டியூட்டரி சுரபி)

வெளிப்பாடு : கண்பார்வை, கேட்கும் எண்ணங்கள்

தன்மைகள் : மன்னிப்பு, உயிர்த்தெழுதல், எளிமை, இரக்கம்.

இதழ்கள் : 2

கனிமம் : ஒளி

குறியீடு : சிலுவை

கைகள் : மோதிர விரல்

தடைகளுக்கான காரணம் : அலை பாயும் கண்கள், தவறான சேர்க்கை

இடது பக்கம்

தேவதை : ஸ்ரீ மகாவீரா
வெளிப்பாடு : சுயக்கட்டுப்பாடுகள், நினைவுகள் { வலது நெற்றி}
தன்மை : அகங்காரம்
கைகளில் : இடது மோதிர விரல்
தடைகளுக்கான காரணம் : தன்னை வருத்தி கொள்ளுதல், தன்னிரக்கம், மன்னிக்க முடியாத தன்மை, இறந்தகால நினைவுகள்

வலது பக்கம்

தேவதை : ஸ்ரீ புத்தா
வெளிப்பாடு : நான் என்ற அகந்தை { இடது நெற்றி}
தன்மை : மமகாரம்
கைகளில் : வலது மோதிர விரல்
தடைக்கான காரணம் : தவறான கடவுளைப் பற்றிய சிந்தனை, கவலைகள், அகங்காரம், ஆதிக்கம்.

ஆக்ஞா சக்கரம் மூளையின் மையத்தில் அமைந்துள்ளது. மானுட பரிணாமத்தில் ஆறாவது நிலையைப் பெறுகிறது. நெற்றியின் மையம் எனக் கண்டறியலாம். இது சகஸ்ராராவுக்கு நுழைவாயில் போல் அமைந்துள்ளது . எனவே எண்ணங்களில் தூய்மை இல்லாத போது குண்டலினி இந்த சக்கரத்தைத் தாண்டி செல்ல இயலாது. இந்த சக்கரத்தைத் தாண்டி மேலே செல்லும் போது நமது நினைவுகள் விரிவடைந்து எண்ணங்களுக்கிடையே இடைவெளி அதிகரிக்கும். இந்த இடைப்பட்ட இடைவெளி என்பது அமைதியானது. இந்த அமைதி இரண்டு இதழ்களையும் அணைத்துக் கொண்டு விரிவடைகிறது. இதனால் நமது எண்ணங்களைத் தோன்றிய இடத்திற்கு மீண்டும் கொண்டு செல்கிறது. இந்த நிலையில்தான் எண்ணங்களற்ற நிலை ஏற்படுகிறது. மிக ஆழமான, நிர்மலமான அமைதி ஏற்படுகிறது. பிரபஞ்சத் தோற்றத்திற்கு ஆதாரம் இந்த அமைதியே ஆகும்.

தன்மை

ஆக்ஞா சக்கரத்தின் அடிப்படைத் தன்மையானது மன்னிப்பு. மானுடப் பரிணாமத்தின் வளர்ச்சியில், இக்குறிப்பிட்ட நிலையில், மனிதனுக்கு அகங்காரம் வளர்ந்துள்ளது. நான் தான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்ற உணர்வு மேலோங்கியுருக்கும். இது பொருளாதார ரீதியின் காரணமாக அமைகிறது. இது பலூனைப் போல் பெருத்துக் கொண்டு செல்லும். இது கட்டுப்பாடுகளையும், சூழ்நிலைகளையும் பாதிப்படையக் கூடிய சக்கரம். இதை மமகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. நம்மை ஆன்மாவிலிருந்து பிரிக்கிறது. ஆகா அகங்காரம், மமகாரம், நம்மை ஆன்மாவிலிருந்து பிரித்து விட சதி செய்கிறது.

மனித மனம்

மனித மனத்தை அகங்காரம், மமகாரம் எனப் பிரிக்கலாம். இவை இட, பிங்கல நாடியின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. இவை ஆக்ஞா சக்கரத்தில் ஒன்றுக்கொன்று குறுக்காகவும், நெடுக்காகவும் மாறி செல்லும். இறந்த கால நினைவுகள், கட்டுப்பாடுகள், உணர்வுகள் ஆகியவை தேக்கமாக வலது மூளையில் இருக்கிறது. ( எதிர்பக்கத்தில் குறுக்கில் சென்று அடையும்) எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள், திட்டமிடுதல், செயல்பாடுகள், ஆகியவை தேக்கமாக மூளையின் மறுபக்கத்தில் (இடதுபுறம்) அமைந்துள்ளது. இவற்றை வெப்பமான வாயுக்களுடன் ஒப்பிடலாம். மிக அதிகமாக நாம் செயல்படும் போது, சிந்திக்கும் போது, வலது நாடி செயல்படுகிறது. இது உண்மையில் வாயுவைப் பயன்படுத்தும்போது இயற்கையிலுள்ள சமநிலை பாதிக்கப்பட்டு மற்ற நாடியும் சக்தியை இழக்கின்றன. இது மூளையில் பனி மண்டலத்தில் ஏற்படுத்தி ஆத்மா ஞானம் பெறுவதில் தடையை ஏற்படுத்துகிறது. ஆன்ம விழிப்புணர்வு பெரும் முன்னர் நாம் பல்வேறு நிலையில் சமநிலை அற்றவர்களாக இருப்போம். அகங்காரம், மமகாரம் ஆகியவற்றின் சக்தி இழப்பைப் பொறுத்து நமது நாடிகளில் சமநிலை தடைப்பட்டு சுழுமுனை வழியாக ஆன்ம முன்னேற்றம் ஏற்படுவதில்லை. குண்டலினி இந்த பனி மூட்டங்களின் பிணைப்பை ஊடுருவி சகஸ்ராராத்தில் பிரம்மா சைத்த்தன்யத்துடன் இணைய முடிவதில்லை.

இது ஏனெனில் பிரான்டிநெல் போன் எனும் முன் மண்டை ஓடுகளின் கடினத்தன்மையால் தான் எனலாம். நாம் பிறக்கும் போது முன் மூளைகளுக்கிடைப்பட்ட பகுதி பிறக்கும் போது மென்மையான திசுக்களால் மூடப்பட்டிருக்கும். குழந்தை வளர வளர திசுக்கள் கடினமாக்கப்பட்டு விடும் பாதையும் தடைபடுகிறது. இதனால் அகங்காரம் தேக்கமடைந்து " நான்" என்பது வலுப் பெறுகிறது.

நாம் நமது அகங்காரத்தை அழிக்க வேண்டும் என்பதல்ல. அகங்காரம் நமது ஆன்ம வளர்ச்சிக்குத் தேவைதான். இவை இல்லாமல் நாம் செயல்பட முடியாது. மமகாரத்துடன் சமநிலை அடைய செய்து இடைவெளியை ஏற்படுத்திய பின்பு தான் குண்டலினி மேலெழுந்து சகஸ்ராரத்திற்கு வந்து சேரும். இது மிகவும் கடினமானது தான்.

மன்னிப்பு

மன்னிப்பும், ஹாஸ்யமும் இவ்விரண்டும் அகங்காரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனமாகும். அகங்காரம் செயல்களை உருவாக்குகிறது. தவறுகளுக்கு தண்டனை வழங்குகிறது. மாற்றங்களை ஏற்படுத்துகிறது. விருப்பத்தைத் தோற்றுவிக்கிறது. மன்னிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதால் அகங்காரத்தை கட்டுப்படுத்தும். நாம் நமது அகங்காரத்தை குறைத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்மா நமக்குள் பிரகாசித்துக் நமது செயல்களில் வெளிப்படுகிறது. இரதத்திற்கு ஓட்டுனராக அகங்காரம் செயல்பட வேண்டும். ஆனால் அவற்றை செயல்பட வைப்பவர் ஆன்மாவாக இருக்க வேண்டும். இறைவனின் கட்டளைகள் ஆன்மாவின் மூலம் செயல்பட்டு முடிவில் நன்மையே ஏற்படுகிறது.

நாம் பிறரை மன்னிக்கும் போது அகங்காரத்தின் மீது நமக்குள்ள செயல்களை திரும்பப் பெறுகிறோம். மன்னிக்க முடியாது என்பது ஒருவிதமான செயல்தான். இதில் நமது முழுமையான கவனத்தை ஒருமுகப்படுத்துகிறோம். நாம் சுலபமாக பிறரை மன்னிக்க முடியாது. இதில் மன்னிப்பதர்குரியவர் பதிப்புக்குள்ளாவதில்லை. நமது கோபம் நமக்கு பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. நமது உணர்வுகளை பதிப்புக்குள்ளாக்குகிறது. இது நம்மை அழிக்கக் கூடியது. நாம் உணருகிறோம் மன்னிப்பு என்பது கற்பனையானது.

மன்னிப்புக்குரியவர் பாதிக்கபடுவதில்லை. நாம் நம்மை உணர்வுபூர்வமாக இழக்கிறோம். ஹாஸ்யம் அகங்காரத்திற்கு ஒரு அருமருந்தாக அமைகிறது. அகங்காரம் எனும் பலூனில் வீக்கம் குறைக்க முடியும். ஹாஸ்யத்தின் மூலம் வீக்கத்தை குறைக்க முடியும். சாட்சி பாவத்தில் அகங்காரத்தை கண்காணிக்க வேண்டும். இதன் சூட்சும தந்திரங்களை அறிந்து கொள்ள முடியும். நாம் அகங்காரத்தை எதிர்த்துப் போராட முடியாது. இது எதிர்மறையானது. ஏனெனில் அகங்காரம் என்பது செயல்தன்மையைக் குறிக்கிறது. ஆகா அகங்காரத்தை எதிர்த்து அகங்காரமே போராடுவது போல் ஆகும். நாம் ஹாஸ்யம ஆகா பேசும் போது நம் இதயம் மென்மையாகி இறுக்கமற்றதாக அதாவது லேசாகி விடுகிறது. அகங்காரமும், மமகாரமும், சூட்சும உலகத்தின் இரு கரைகளாக அமைகிறது. மமகாரம் தனி மனிதனின் சூழ்நிலை எனலாம். இங்குதான் கடந்த கால நினைவுகளும் அனுபவங்களும் தேங்கி இருக்கின்றன. இதை கடந்த நிலையிலிருப்பது கூட்டு ஆழ்நிலை உணர்வு ஆகும்.

ஆவிகளின் ஆய்வுகள் செய்பவர்கள் மந்திரவாதிகள். இந்த நிலையிலிருந்து கொண்டு அனுபவங்களை வியாபாரமாக்குகிரார்கள். அகங்காரம் என்பது தனி மனிதனின் மேல் நிலை உணர்வு ஆகும். இது எதிகாலத்தை உணர்த்துவதாகும். இந்த கூட்டு மேல்நிலை உணர்வு நிலையில் தான் அதிகாரத்தை விரும்புவர்களும், புதுமையை விரும்புவர்களும், தங்களது எதிர்கால வியாபாரத்தை நடத்துகிறார்கள். இந்த சூட்சும நிலையில் மிகவும் ஆழமான ஆராய்ச்சி செய்வது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அன்னையவர்கள் கூறும் போது, கரியிலிருந்து வரும் புகையும் (ஆழ்நிலை உணர்வு) பென்சால் ( Benzol) மேல்நிலை உணர்விலிருந்து வரும் புகை இரண்டுமே சமமாக மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். ஆகவே ஆவிகளால் பீடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இடது ஆக்ஞாவின் தேவதை ஸ்ரீ மகாவீரா . இவரது அவதாரம் விரட்டாவின் மமகாரத்தை வெளிப்படுத்தும். இவர் வலது நெற்றியில் அமர்ந்திருக்கிறார். அவர் அஹிம்சையை தனக்கும் வலியுறுத்துகிறார். அவரது கருத்துக்கள் இரக்கமும், அஹிம்சையையும் வலியுறுத்துவது ஆகும்.

வலது ஆக்ஞாவின் தேவதை ஸ்ரீ புத்தா . இவர் விரட்டாவின் அகங்காரத்தை வெளிப்படுத்துகிறார். இடது நெற்றியின் மையத்தில் அமர்ந்திருக்கிறார். இவர் இரக்கத்தையும் அஹிம்சையையும் உலகிற்கு பரப்பினார். இவரும் எட்டு படிகள் கொண்ட வழிதனையும் சமநிலை அடைவதையும் வலியுறுத்தினார்.

இவர் அகங்காரத்தை ஊடுருவி குண்டலினி செல்லும் வழி முறைகளை கூறியுள்ளார். மென்மையான எண்ணங்களையும் , மனதையும் வலியுறுத்தினார். பயங்கரமான எண்ணங்களையும் தவிர்க்க வேண்டுமென்றும் இயற்கையான தெளிவான எண்ணங்களினால் மமகாரம் கரைந்து விடுகிறது. ஸ்தூல எண்ணங்களிலிருந்து சூட்சும் எண்ணங்களினால் எவ்வாறு உயருவது என்பதை கூறியிருக்கிறார்.

சகஸ்திரார சக்கரத்திற்கு மேலெழும் பொது சுழு முனையில் ஆக்ஞா சக்கரத்தின் வழியாக செல்கிறது. இது அன்னை ஜீசஸ் மேரியின் இடமாகும். இயேசு கூறினார். அவர்தான் ஒளியாகவும் பாதையாகவும் இருக்கிறார்கள். இந்த பாதை இறைவனின் ராஜ்ஜியத்திற்கு சென்று சேர்கிறது. மன்னிக்கும் சக்தி யின் மூலம் மனித குலத்திற்கு பாவத்தின் பளு குறைகிறது. உலகத்திற்கு மனிதர்களின் அகங்காரத்தை அறிய வைக்க அவர் சிலுவையில் அரையுண்டார். மனிதன் மனம் திருத்த துவங்கிவிட்டான். இவ்வாறாக தனது எளிமையை அறிந்து கொள்ள முடிந்தது . இயேசு கிருஸ்து எல்லோரையும் மன்னிக்கும் சக்தியை நமக்குக் கொடுத்திருக்கிறார். உள்ளுணர்வோடு மன்னிப்பு கேட்டால் மன்னிக்கப்படுவார்கள். நம்மாலும் பிறரை மன்னிக்க முடிகிறது. இது நமது கடந்த காலத்தை மட்டும் விட்டொழிப்பதில்லை நமது கிரம பலனையும், பாவங்களையும் விட்டொழிக்கிறது. உண்மையில் ஆன்மா கர்மாவையோ , பாவத்தையோ தேக்கி வைப்பதில்லை. குற்ற உணர்வையும் தேக்கி வைப்பதில்லை. அஹங்காரத்தை கடந்து ஆன்மாவாக மாறும் பொது நாம் நமது கடந்த காலத்தை கடந்தவர்களாகிறோம்.

ஆன்ம ஞானத்தில் ஜீசஸ் மிகப் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளார். நமது குற்ற உணர்வுகள் அனைத்தும் கரைக்கப்பட்டு விட்டன. அகங்காரத்தைக் குறைக்கப்பட்டு விட்டது. மன்னிப்பை மக்களுக்குப் போதிக்கப் பட்டு ஆன்மாவுக்கு இறப்பில்லா நிலையை உணர வைத்து விட்டார். அவரது உயிர்த்தெழுதல் மூலமாக அவர் ஆன்மாவாக மீண்டும் பிறந்தார். அன்னைக் குண்டலினி நமக்கு இரண்டாவது பிறப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.


ஸ்தூல வெளிப்பாடு :

ஆக்ஞா சக்கரம் கண் பார்வையை பாதுகாக்கிறது. ஆகவே நாம் கண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் அவற்றை மிரைய்ற வகையில் பண்படுத்தக் கூடாது. அலைபாயும் கண்களை, பொருட்கள் மீது கொள்ளும் மோகமும் தவிர்த்து இயற்கையைக் கண்களால் கண்டு களிக்க முயல வேண்டும். ஜோதியைக் கண்களால் பார்ப்பதன் மூலம் சுத்திகரிக்கப்பட்டவர்களாவீர்கள்.


உறுதி மொழி:

" அன்னையே ! ஆன்மாவுக்கு எதிராகத் தவறு இழைத்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்".

பொதுவான அறிவுரை:

இடது கை அன்னையை நோக்கியும் , வலது கை தலையின் பின்புறமும் வைத்துக் கொள்ள வேண்டும்.

வலது உள்ளங் கையினால் தலையின் பின்புறத்தில் மென்மையாகத் தட்ட வேண்டும். இடது கை அன்னையின் படத்தை நோக்கி வைக்க வேண்டும்.

மமகாரத்தின் அழுத்தத்தை வலது மேல் நெற்றியில் அழுத்தி தேய்த்து குறைக்க வேண்டும்.

அகங்காரத்தை வலது மேல் நெற்றியின் பின்புறமிருந்து அழுத்தி குறைத்து சுவதிஸ்டானத்தின் வரை இறக்க வேண்டும். கடந்த கால நினைவுகளைத் தவிர்க்க வேண்டும். மூடப் பழக்க வழக்கங்களையும் , கட்டுபாடுகளையும் தவிர்க்கவும். சில நேரங்களில் மமகாரம் விரிவடைந்து அகங்காரத்தை அழுத்தும் பொது வலது விசுத்தியில் உபாதைகள் தோன்றும். எனவே இது மமகாரத்தின் விளைவாக ஏற்பட்டது எனக் கொள்ள வேண்டும்.


வலது ஆக்ஞா சுத்திகரிப்ப்பு:

ஆக்ஞா சக்கரத்தில் மெழுகுவர்த்தி சுவாலை மூலம் ஸ்ரீ மாதாஜியைப் பார்க்க வேண்டும்.

" அன்னையே ! எல்லோரையும் மன்னித்து விட்டேன் . என்னையும் மன்னித்து விட்டேன்."

அறிவுரை:

இடது கை அன்னையின் படத்தை நோக்கி வைத்து கொண்டு வலது கை நெற்றியில் வைத்து மெல்ல அழுத்தியபடி கீழேக் குனிய வேண்டும். தவறான தியான முறையை விட்டு விட வேண்டும். அகங்காரம் அதிகரித்து மமகாரத்தை அழுத்தும் போது ஞாபக மறதி ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக