Translate

வியாழன், 2 ஜூன், 2011

தியானத்தைப் பற்றி அன்னையின் அருளுரை




அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, டீ அருந்திவிட்டுப் பேசாமல் அன்னையின் படத்திற்கு முன்பு அமர வேண்டும். தீபம், பத்திகள் ஏற்றிக் கொள்ள வேண்டும். அதிகாலையில் தெய்வீக அதிர்வுகள் அதிகமாக கிடைக்கும். பறவைகள் விழித்தெழும். சூரியன் உதயமாகும். மலர்கள் மலர ஆரம்பிக்கும். மனத்தில் தெளிவாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பத்து வயது குறைவாக தென்படுவீர்கள். உறக்கத்தைப் பற்றி நான் கூற வேண்டியதில்லை. அது தன்னிச்சையாக நிகழக் கூடியது.

தியானத்தில் எண்ணங்களை நிலை நிறுத்துவார்கள். எனது படத்தைக் கண்களால் பார்த்து கவனத்தை நிறுத்துங்கள். தியானத்தைத் துவக்கவும். லார்ட்ஸ் பிரேயரைக் கூறவும். எண்ணங்கள் அடங்கும். அதுதான் ஆக்ஞாவின் நிலை. நான் எல்லோரையும் மன்னித்து விட்டேன் , என்னையும் மன்னித்து விட்டேன்" என்று கூறவும். இப்போது தியானம் செய்யவும். " நான் இதி செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும்" என்ற எண்ணம் தோன்றலாம். உங்கள் அன்னையிடம் சமர்ப்பணம் செய்யவும். நீங்கள் எண்ணங்களற்ற நிலையில்தான் ஆன்ம வளர்ச்சி பெற முடியும். உங்கள் சக்கரங்களில் சிலத் தடைகள் மறுக்கலாம் மறந்து விடுங்கள்.

இப்போது சரணடையுங்கள், ஏதாவது சக்கரம் தடைப்பட்டால் " அன்னையே தங்களிடம் இதை சமர்ப்பிக்கிறேன்" என்று கூற வேண்டும் . பகுத்தறிவுடன் சரணடையக் கூடாது. . கவலைகள் கூடாது. புனிதமான அன்பு மட்டும் தான் நம்மை சரியாக வழிநடத்தும். எல்லாக் கவலைகளையும் அன்னையிடம் ஒப்படைக்க வேண்டும். அகங்காரம் நிறைந்த சமுதாயம் இது. சரணடைதல் மிகவும் கடினமானது. ஏதாவது சக்கரங்கள் தடைப்பட்டால் சமர்ப்பணம் செய்து விடுங்கள்.

சக்கரங்களின் தூய்மை அடைவதை உணர்வீர்கள். காலையில் அதிகமாக எந்த செயல்களையும் , செய்ய வேண்டியதில்லை. கைகளை அதிகமாக அசைக்காதீர்கள். உங்கள் சக்கரங்கள் தியானத்தின் மூலம் தூய்மை அடையும்.




உங்களது இதயத்தில் அன்பை விதையுங்கள். உங்கள் குருவை அங்கு ஆசனம் கொடுத்து அமர செய்யவும். அதன் பிறகு தரையில் நெறிபடும் வகையில் கைகளை மேல் நோக்கி வைத்துக் கொண்டு வணங்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பிறகு, தோன்றும் எண்ணங்கள் எல்லாம் கற்பனையல்ல. உங்கள் மனமும் பிரகாசமடைந்த நிலை பெறுகிறது. உங்களை தயார் செய்து கொண்டு, குருவிடம் சரணடையுங்கள். தியானத்திற்குரிய சூழ்நிலைக்காக, அன்னையிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.


__ மாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக