Translate

வியாழன், 9 ஜூன், 2011

விசுத்தி சக்கரம்





தேவதை : ஸ்ரீ ராதா கிருஷ்ணா
ஸ்தூல வெளிப்பாடு : செர்விக்கள் பிளக்சஸ், கழுத்து நரம்பு மையம், கழுத்து, தோள்கள், வாய் , நாக்கு பற்கள், மூக்கு, முகம்.
தன்மைகள் : கூட்டு விழிப்புணர்வு, சாட்சி பாவம், நகைச்சுவை உணர்வு, பற்ற்ற நிலை, இராஜீய உறவுகள்.
இதழ்கள் :16
கனிமம் : ஆகாயம்
கைகள் : ஆள் காட்டி விரல்
தடைக்கான காரணம் : கூட்டு வழிபாடு தவிர்த்தல், தூண்டுதல்களுக்குல்லாதல், சுய மரியாதை இழத்தல், சகோதர சகோதரிகளை நிந்தனை செய்தல், சாட்சி பாவம் இருத்தல்.

இடது விசுத்தி

தேவதை : ஸ்ரீ விஷ்ணு மாயா
தன்மைகள் : சகோதர- சகோதரி உறவுகள் தன்னம்பிக்கை
கைகள் : இடது ஆள் காட்டி விரல்
தடைகளுக்கு காரணம் : குற்ற உணர்வு, தவறான நடத்தை, கடும் சொற்கள், தரக்குறைவான கிண்டல் பேச்சு

வலது விசுத்தி

தேவதை : ஸ்ரீ யசோதா மாதா
தன்மைகள் : பொய் பேசுதல், புறம் பேசுதல், தூய்மையை இழிவு படுத்துதல், இழிவான சொற்களால் பேசுதல்
கைகளில் : வலது ஆள்காட்டி
தடைக்கான காரணம் : தவறான உணவு வகைகள் கல்லிரலுக்கு ஊறுவிளைவிக்கும் உணவு உட்கொள்ளுதல்

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில், பரஸ்பரமான கூட்டு, சமுதாய வாழ்க்கை முறையை இந்த விசுத்தி சக்கரம் முக்கியமாகப் பிரதிபலிக்கிறது. எல்லா வகையிலும் இயற்கையாகவே சின்னஞ்சிறு வேறுபாடுகளைத் தவிர்த்து வளர்ச்சியடைந்த சமுதாயமாக ஆத்மரீதியாக இணைந்து வாழ்வதற்கு இந்த சக்கரம் உறுதுணையாக உள்ளது.


தன்மைகள்

நமக்குள் இருக்கும் ஆன்மீக சக்தியை வளப்படுத்திக் கொள்ள நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகளை சாட்சி பாவத்துடன் மலரும் பொது ஆன்ம சாதகருக்கு வாழ்க்கையே நாடக மேடையாக அமைகிறது. சாட்சி உணர்வு வெளிப்படுகிறது. கூட்டு விழிப்புணர்வில் நாம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் நாம் ஆழமாக தெய்வீக அதிர்வுகளை உணர்ந்து அறிந்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பரிபூரணத்துவத்தின் ஒரு துளியாக நாம் உணரத் துவங்கும் போது ஒவ்வொரு சக்கரத்திலும் உள்ள சூட்சும சக்தியை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதே போல் பிறரது சக்கரத்திலும் அறிந்து கொள்ள முடிகிறது.

இதைத்தான் செயல்முறைப்படுத்தும் தியானம் என்று சஹஜயோகத்தில் அழைக்கிறோம்.இந்த நேரடியான செயல்முறைதான் நமது கைவிரல் நுனிகளில் சாட்சியாக வெளிப்பட்டு பிரகாசிக்கின்றன. நமது உடலிலும் அறிந்து கொள்ள முடிகிறது. நாம் கூட்டாக விழிப்புணர்வு பெரும் போது பிறரது ஆன்ம நிலையில் செயல்பட முடியும். அவர்களது சக்கரங்களின் அதிர்வு நிலைகளை கைவிரல் நுனிகளில் அல்லது உள்ளங் கைகளில் தெரிந்து கொண்டு நமது தெய்வீக அதிர்வுகளை சொட்சுமமாக பிறரது சக்கரங்களுக்கு தேவைக்கு தக்கபடி செலுத்த முடியும். இது மனித இனம் பெற்றுள்ள புதிய கருத்துணர்வு இயற்கையான உணர்வு. இதுவே சூட்சும அதிர்வுகளாகும்.

இந்த மனித இன சகோதரத்துவம் தான் பல்வேறு கால கட்டங்களிலும் ஜென்ம ஜென்மமாக ஆன்மீக சாதகர்கள் தேடிக் கொண்டிருந்த குறிக்கோள் ஆகும் . இந்த குறிப்பிட்ட காலத்தில் தான் இது வெளிப்படுகிறது. இது வெறும் கற்பனையிலோ அல்லது யூகத்திலோ தோற்றுவிக்கப்பட்டதல்ல. இது சாட்சிப் பூர்வமான பேருண்மையாகும்.

ஹம்ச சக்கரம்

ஹம்ச சக்கரம் என்பது விசுந்தி சக்கரத்தின் ஒரு பகுதியாகும். இது இரண்டு புருவங்களுக்கு இடையில் மூக்கிற்கு மேலாக அமைந்துள்ளது. இந்த சக்கரம் நமக்கு விஷயங்களை வேறுபடுத்தும் உணர்வு , மேற்ரும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் உணர்வுகளைத் தருகிறது, இது மேலும் ஆணுக்கும் , பெண்ணுக்கும் இடையே நிலவும் உறவை நிர்ணயிக்கிறது. உலகம் முழுவதும் பொதுவாக நிலவும் புனிதமான சகோதர்-சகோதரி உறவையும் நிர்ணயிக்கிறது. இந்த உறவிலிருந்து திருமண உறவாக மாற்றியமைக்கும் போது தர்மங்களுக்கு கட்டுப்பட்டு, மதிப்பு மிக்க தூய்மையான அமைப்பு ஏற்படுகிறது.

கணவனானாலும், மனிவியானாலும் மற்றவருக்கு மதிப்பும், மரியாதையும் தர வேண்டியது அவசியமாகும். இதில் எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது. ஆண் அனங்க இருக்க வேண்டும். பெண் பெண்ணாக இருக்க வேண்டும். புனிதமான திருமண உறவின் அவசியத்தை மறந்து விடக் கூடாது. சமுதாயம் முழுவதுமாக அன்பை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக வளப்படுத்த வேண்டும். குடும்ப அமைப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், மரியாதையும் ஊக்கப் படுத்த வேண்டும்.

ஜனன மரண மூலம் மனித இனத்தில் ஏற்படும் பரிணாம வளர்ச்சிக்கு இது ஒரு வாகனமாக அமைகிறது. இந்த சக்கரம் ஐம்புலன்களில் உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாகவும் அமைகிறது. இதனால் விசுத்தி சக்கரம் ஐம்புலன்களின் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது.

விசுத்தி சக்கரத்தின் தேவதை ஸ்ரீ கிருஷ்ணா அவர் சாட்சி பாவத்திலுள்ள கடவுளாகப் பரிமளிக்கிறார். இவர் முழுமையாக பற்றில்லாமல் பிரபஞ்ச நாடகத்தைக் கண்டு களிக்கிறார். அவரது அவதாரம் நமக்கெல்லாம் மிக உன்னதமான மானிட நிலையடைய நம்மை ஊக்குவிக்கிறது. அவர் மிகவும் உன்னதமான தீர்க்கமானத் தீர்ப்புகளை அளிப்பவர் . அவர் மிகவும் தன்னடக்கம் கொண்டவராக இருந்து அர்சுனனுக்கு தேரோட்டியாகவும் போரில் செயல்பட்டார். அவர் தான் நமது யோக மார்க்கத்திற்கும், ஆன்ம இணைப்பிற்கும் குருவாக இருந்து வழிகாட்டுகிறார். இச்சக்கரம் விராட்டா சக்தியின் இருப்பிடம் எனலாம். கீதையின் இரண்டாவது அதிகாரத்தில் விளக்கமாக குறிப்பிட்டது போல இந்தப் பிரபஞ்சத்தில் கடவுளின் வெளிப்பாடாக இந்த இடம் அமைகிறது.

பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு அம்சங்கள் தன்னில் அடக்கிக் கொண்டு, பல்வேறு தெய்வங்களின் ஸ்வரூபங்களையும், அடக்கிக் கொண்டு பிரமானடமான ஸ்ரீ கிருஷ்ணரின் விராட்டா ரூபத்தைக் கண்டு களித்தார். நமது உடலிலுள்ள அணுக்கள் எவ்வாறு குண்டலினி எனும் நூலிழையால் இணைக்கப்பட்டு இயங்குகின்றதோ அது போல் எல்லாம் வல்ல இறை சக்தியும் செயல்படுகிறது. இந்த பரிபூரனத்துவத்தைத் தான் நாம் தியானிக்க வேண்டும். நமது மானிட இனம் ஆத்மரீதியாக இணைக்கப்பட்டு முழுமை அடைந்த சக்தியாக நாம் உணர வேண்டும்.

நாம் நமது மூர்க்கத்தனதாலும், தாழ்வு மனப்பான்மையாலும் செயல்பட்டு நாம் நம்மை பரிபூரனத்துவத்திளிருந்து நம்மை பிரித்துக் கொள்ளக் கூடாது. பழமையான கட்டுப்பாடுகளால் பிணைக்கப்பட்ட தனி மனிதன் தனக்கென்று ஒரு தனிக் கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்கிறான். நாமாகத் தான் இந்த பிரபஞ்ச சக்தியாக மாற முடியும். மற்றவர்களின், ஆன்மாவை உணர முடியும். இனிமையான உணர்வுடன் மலர்களின் சுகந்தமான வாசனையை அறிந்து கொள்வது போல உணர வேண்டும்.

ஸ்தூல வெளிப்பாடுகள்

விசுத்தி சக்கரம் 16 இதழ்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்ததாகவும், தனியாக செயல்படுவதாகவும், அமைந்துள்ளது. ஸ்தூல சரீரத்தில் இது கழுத்து, தொண்டை, தோள்கள், முகம், வாய் பற்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. உதாரணமாக நாம் நம்மை அதிகமாக குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறோம். புகையிலை போன்ற பொருட்களால் தொண்டைப் பகுதி பாதிப்படைகிறது. நாம் நமது பற்களை நன்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்காலத்தில் இது அவசியமாகிறது. இந்த சக்கரம் மலரும் போது நமக்கு பற்ற்ற தன்மை வளர்கிறது. இதனால் உலக வாழ்க்கையை ஒரு நாடக மேடையாக சாட்சி பாவத்தில் உணர முடிகிறது. இதனால் நமக்கு அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களைத் தவிர்ப்பதால் இயற்கையாகவே அவை சிறிய நிகழ்ச்சியாக அமைந்து விடுகின்றன.

இதனால் பிரட்சனைக்கு ஆளாகாமல் மறுபக்கம் சென்று விடிகிறோம். இதனால் நமது செயல்களுக்கான விளைவுகளுக்கு நாம் பொறுப்பேற்பதில்லை என்பது பொருளல்ல. நாம் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு விட்டோம் என்பதல்ல. இது நமக்கு மிகவும் உணர்ச்சி வயப்பட்ட கால கட்டத்தில் சமனிலையோடும், சீரான உணர்வோடும் செயல்பட உதவுகிறது. நாம் சாட்சி பாவத்தில் நமது விளையாட்டைக் கண்டு களிக்கிறோம். நம்மை, நமது செயல்பாட்டில் இருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும், உணர்ச்சிப் போராட்டத்திலிருந்தும் விலக்கிக் கொள்ள முடிகிறது.

நாம் ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு நமது சாட்சி பாவத் தன்மை மிளிர்கிறது. நமக்கு எல்லா விஷயங்களும் வெளிப்புற காட்சியாகத் தென்படுகிறது. இந்த விஷயங்கள், இந்த நிகழ்ச்சிகளுடன் நமது ஆன்மா சம்மந்தப்பட்டதல்ல என்று உணர்கிறோம். இந்த வழிமுறையில் ஆன்மாவின் புறத்தன்மையின் அடுக்குகளைக் கண்டறிந்து களைய முயல்கிறோம். ஸ்ரீ மாதாஜி அவர்கள் கூறியிருக்கிறார்கள் : நாம் நமது நடிப்பைக் கண்டு கொண்டிருக்கிறோம். இந்த உலகமே ஒரு நாடக மேடையாக அமைந்துள்ளது.

இதே கருத்தைத்தான் ஷேக்ஸ்பியர் அவரது நாடகங்களில் கூறியிருக்கிறார். நமது பிரட்சனைகளை நம்மால் தீர்க்க முடியும். அதற்கான ஒரே வழி இந்த பேருண்மைதான். பெரும்பாலோர் பிரட்சனைகளைத் தீர்க்க முடியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் விஷயங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சாட்சி பாவத்தில் சிறந்த முடிவுகளைத் தர முடியும் ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு நமக்குள் இந்த ஆற்றல் வளர்கிறது. எவ்வகையான சூழ்நிலையானாலும், சோதனையினாலும் அவற்றை சந்திக்க தயாராகி விடுகிறோம். நாடகத்தில் நமது கதாபாத்திரத்தை உணர முடியும். மிகவும் தீர்க்கமான தெளிவான முடிவு எடுக்க முடியும்.

ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு சிலருக்கு பிரட்சனையை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். ஆச்சரியப்படத் தேவையில்லை. நாம் தூய்மையான புற சூழ்நிலையில் வாழவில்லை என்பது உண்மை. வாழ்க்கை என்பது சோதனைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்து மிகுந்த ஆற்றலுடனும் ஆன்ம சக்தியுடன் தீர்வு காண்பதுதான், செயற்கையான விஷயங்கள் நாளடையில் மறையத் துவங்கும். நாம் தூய்மை ஆக்கப்பட்ட பின்பு ஆன்மாவாக மாறுகிறோம். இந்த நிலையில் தான் நாம் உண்மையை உணர்ந்து கொள்கிறோம். நமது சகஜயோகம் இந்த தர்ம யுத்தத்தில் போரோட நமக்கு அன்பு என்னும் சிறந்த ஆயுதத்தைக் கொடுத்துள்ளது.

ஆன்மாவாக மாறும் பேரின்ப நிலையினேயே நமக்கு பூரணமான அனுபவத்தைக் கொடுக்கிறது. இது தான் நாம் தேடிக் கொண்டிருக்கும் பேருண்மை.


கூட்டுணர்வு

கூட்டு வாழ்க்கையின் மூலமும் சமுதாயத்தில் இணைந்து வாழ்வதன் மூலமும் மனித இனம் பரிணாம வளர்ச்சி முழுமை அடைந்த கால கட்டத்தைக் குறிப்பது விசுத்தி சக்கரம். நமது செயல் நயம் இந்த சக்கரத்தை செயல்பட செய்கிறது. இது பிறருக்கும் நமக்குமாக செயல் நயத்தை வெளிப்படுத்தும் சக்கரமாக அமைகிறது. பிறரை நாம் மதிக்கவில்லைஎன்றால் அவர்கள் நம்முடன் சகோதர உறவுகளை வைத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே இந்த சக்கரம் மிகவும் முக்கியமான சக்கரம். இதன் மூலம் தான் நமது கூட்டுணர்வு சக்தியை வளப்படுத்திக் கொள்ள முடியும். நம்மீதே நமக்கு மதிப்புக் குறைந்தால் நமக்குள்ளே குற்ற உணர்வு ஆழ்மனத்தில் சேரும் , இடது விசுத்தியைப் பாதிப்புக்குள்ளாக்கும். இதைத் தொடராவிட்டால் நமது ஆன்ம வளர்ச்சிக்கு தடை ஏற்படுகிறது. சமய சடங்களாலோ, ஒழுக்கக் குறைபாடுகளாலோ நமது ஆன்ம வளர்ச்சிக்கு தடைகள் ஏற்படுவதுண்டு. நாம் குற்ற உணர்வு கொள்ளாமல் பழகிக் கொள்ள வேண்டும். நமக்குள் குற்ற உணர்வுகளைத் தேக்கிக் கொண்டு, நம்மை அதனின்று மறைந்து வாழவும் தேவையில்லை. நாம் நமது ஆன்மாவை உணர்ந்த ஆன்மா குற்ற உணர்வுகளை சேர்த்துக் கொள்வதில்லை. ஆன்ம விழிப்புணர்வு பெற்ற பின்பு நாம் நமது குறைகளை அறிந்து நீக்கி விட வேண்டும். " நான் குற்றமற்றவன்" என்ற உறுதி மொழியைக் கூறுவதன் மூலம் தூய்மைபடுத்தலாம்.


இந்த சக்கரம் சொல்வன்மையேக் குறிக்கிறது. நாம் பயன்படுத்தும் சொற்கள் மிகவும் இனிமையானதாகவும், மேன்மையானதாகவும் இருத்தல் நலம். கடுமையான வார்த்தைகள், கீழ்த்தரமான வார்த்தைகள் இந்த சக்கரத்தைப் பழுது அடைய செய்யும். மிக அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் வலது பக்கமுள்ள விசுத்தி சக்கரம் வலுவிழக்கிறது. நாம் பேசும் போது நமது இதயத்திலுள்ள ஆன்மாவை சாட்சியாக வைத்துக் கொண்டுப் பேசிப் பழக வேண்டும். தேவையற்ற மந்திரங்களை அதிகம் பயன்படுத்துவதால் இச்சக்கரம் பழுதடையும். இது உண்மைதான். இன்று மந்திரங்கள் வாணிகப் பொருளாகி விட்டது. இது சில சமயம் நமது உணர்வுகளை வயப்படுத்தி மயக்க உணர்வு கொடுக்குமே தவிர ஆன்மாவுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை.


இது போல் தன்னிச்சையாக மந்திரங்களைப் பிரயோகப்படுத்துவதால் அல்லது தன வயப்படுத்துவதுள், நமது மேலான உணர்வுகளுக்கு எதிர்மறையாக அமையும். நாம் நமக்குள் இருக்கும் ஆன்மாவின் வளர்ச்சியைத் தியானத்தின் மூலம் அனுபவப்பட வேண்டும். இது வெறும் கருத்துக் கோர்வையாக இருக்கக் கூடாது. இது நமக்கு ஆழமான அமைதியையும் எண்ணங்களற்ற நிலையையும் கொடுத்து நமக்குள் சக்தியை உருவாக்கி சமநிலைப்படுத்துகிறது.

விசுத்தி சக்கரத்தின் சமநிலை

இச்சக்கரத்தின் சமநிலை பாதிக்கும் போது பணிகாலங்களில் மூக்கு , தொண்டை சம்மந்தப்பட்ட உதாதைகள் ஏற்படும். இதனால் சில சமயங்களில் தொண்டை வலி , இருமல், பல்வலி, காது வலி, போன்ற உபாதைகள் ஏற்படுவதுண்டு. நாம் சில சமயம் குற்ற உணர்வு பெற்றவர்களாக இருக்கும் போது தோள் இறுக்கம், கழுத்துவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும் . வழக்கத்துக்கு மாறான கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துவதாலும் மறைமுகமாக வசை சொற்கள் பயன்படுத்துவதாலும் இச்சக்கரம் தடைப்படும்.

விசுத்தி சக்கரத்தின் சமநிலை

இச்சக்கரத்தின் சமநிலை பாதிக்கும் போது பணிகாலங்களில் மூக்கு , தொண்டை சம்மந்தப்பட்ட உதாதைகள் ஏற்படும். இதனால் சில சமயங்களில் தொண்டை வலி , இருமல், பல்வலி, காது வலி, போன்ற உபாதைகள் ஏற்படுவதுண்டு. நாம் சில சமயம் குற்ற உணர்வு பெற்றவர்களாக இருக்கும் போது தோள் இறுக்கம், கழுத்துவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும் . வழக்கத்துக்கு மாறான கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துவதாலும் மறைமுகமாக வசை சொற்கள் பயன்படுத்துவதாலும் இச்சக்கரம் தடைப்படும்.

சுத்திகரிப்பு முறை

கனிமம்: மெழுகுவர்த்தி கழுத்துப் பகுதியில் காட்டுவது சுவாசத்தைக் கண்காணிக்க வேண்டும். உன்னியும், வெளியேயும் இழக்க வேண்டும். இந்த நேரத்தைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். இறுதியில் உள்ளே , வெளியே இழுக்கும் பயிற்சி நின்று விடும். அந்த நிலைக்கு முயற்சிக்கலாம்.


குறிப்பு

* சுவாசப் பயிற்சி ஹத யோகப் பயிற்சி எனலாம்.

* உறுதி மொழி : " அன்னையே என்னைப் பரிபூரனத்துவத்தில் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளும்.

பொது அறிவுரை:

பனிக்காலங்களில், கழுத்து, காது, மூக்கு ஆகிய பகுதிகளை கைக் குட்டையைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். உப்புக் கரைசலைப் பயன்படுத்தி வாய், தொண்டை ஆகியவற்றைக் கொப்பளிக்க வேண்டும். ஊற வைத்த பச்சரிசியை நன்கு மென்று உண்ண வேண்டும். ஆலிவ் ஆயில் பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும். தலையில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்ய வேண்டும். மூக்கில் தினமும் நெய் பச்சைக் கற்பூரம் கலந்து ஒரு துளி விட்டு கொள்ள வேண்டும்.


இடது விசுத்தி:

கனிமம்:
மெழுகுவர்த்தி பயன்படுத்தி கழுத்துப் பகுதியில் சுத்திகரிக்கலாம்.

உறுதிமொழி:
" அன்னையே நான் குற்றமற்றவன்"

பொது அறிவுரை:
* தெய்வீக நுண் அதிர்வுகளை விசுத்தி சக்கரத்தின் இடது பக்கம் செலுத்த வேண்டும். இனிமையான சொற்களைப் பயன்படுத்தவும்.
* முகபாவங்களைத் தெளிவாக வைத்துக் கொள்ளவும்.
* சகோதர, சகோதரி உறவுகள் தூய்மையாக இருக்க வேண்டும்.
* அதிகமாக உங்களைப் பற்றி பேசாதீர்கள்.


வலது விசுத்தி

கனிமம்:
கற்பூரம், ஓமம் பயன்படுத்தி கழுத்துப் பகுதி சுத்திகரிக்கலாம்.

உறுதி மொழி :
" அன்னையே இனிமையான முகபாவத்தையும், சொற்களையும் , செயல்பாடுகளையும் கொடுத்து அருள்புரிய வேண்டும்".

பொது அறிவுரை
தெய்வீக நுண் அதிர்வுகளை செலுத்தும் இனிமையான சொற்களைப் பயன்படுத்தவும். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கடுமையான வார்த்தைகளில் கவனத்தை செலுத்த வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக