Translate

புதன், 11 மே, 2011

மூலாதார சக்கரம்





தேவதை : ஸ்ரீ கணேஷா

ஸ்தூல வெளிப்பாடு : கழிவு உறுப்புகள் , மலக்குடல் , பிறப்புறுப்புகள், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், பெல்விக் நரம்பு மையம்.

தன்மைகள் : மங்கலத் தன்மை , தாய்மை, தெய்வீக குழந்தை உள்ளம் , ஆத்மா ஞானம் , கற்பு .

இதழ்கள் 4

கனிமம் : பூமி, கரி

குறியீடு : சுவஸ்திக்

கைகளில் : உள்ளங்கை மேடு

தடைகளுக்கான காரணம் :

இடது : காமக்களியாட்டம், மந்தர - தந்திர , ஆவியுடன் பேசுதல்.

வலது : வெளி வேஷம் , அடிமைத்தனம் , அதிகமாக சுத்திகரித்தல்.

நடு : மடமை , அறியாமை .

மூலாதார சக்கரம் தூய்மைப்படும் போது குண்டலினி மாதா விடுபட்டு மேலெழும்புகிறது. ஆகவே இந்த சக்கரம் குண்டலினின் தூய்மை யையும் , மங்களத் தன்மையையும் பாதுக்காக்கிறது.
மூலாதார சக்கரம் மற்ற எல்லா சக்கரங்களுக்கும் வேர் போன்றதாகும்.குழந்தை உள்ளம் போல் மிகவும் தெளிவான சிந்தனையுடன், கள்ளம் கபடம் இல்லாமல் இருந்தால் மட்டுமே இது செயல்படும். சாதகன் தனது சுற்று சூழலால் பெறப்பட்ட அழுக்குகள் தேங்கி காம வெறி கொண்டவனாக வெளிப்படுத்தப்படுகிறான்.
மூலாதாரம் என்பது பூமி . எல்லா உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமானது. இந்த சக்கரம் சக்திகளை பெறும் போது, காந்த ஷக்தியாக வெளிப்படுகிறது. இந்த சக்தியை சாதகன் உணரலாம். மூலாதாரம் மிகவும் பலமாக இருப்பவர்கள் , தெளிவான சிந்தனை உடையவர்கள். இது குண்டலினி சக்திக்கு கீழிருந்து அந்த தெய்வீக சக்தியை காத்து வருகிறது.
சமஸ்கிருதத்தில் 'மூலா' என்றால் வேர் என்று பொருள். எனவே குண்டலினி சக்திக்கு ஆதாரமாகவும், சுட்ஷுமா சரீரத்தில் வேராகவும் அமைகிறது.

தன்மைகள் :
குழந்தை மனம் என்பது அடிப்படை தன்மையாகும். சுயநல நோக்கமில்லாமல் செய்யக்கூடிய செயல்கள் எனலாம். இது எல்லா குழந்தைகளுக்கும் உள்ள பொதுவான குணமாகும். இயற்கையின் வெளிப்பாடுகள் மலைகள், நீர்வீழ்ச்சிகள் , இயற்கைக் காட்சிகள் ஆகும். இவைகளைப் பற்றி குழந்தைகள் ஆர்வமுடன் கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். பரிபூரணமான ஞானத்தின் ஆணிவேர் குழந்தைத் தன்மை எனலாம். எல்லா நேர்மையான குணங்களுக்கும் ஆதாரமானது குழந்தை தன்மை என்னும் தெளிவான மனம்.

பண்பாட்டு த்தன்மை :
இச்ச்சக்கரத்திற்கு உரிய தேவதை ஸ்ரீ கணேஷா. யானைத் தலையைக் கொண்ட குழந்தை. இவர் குழந்தை உள்ளம் கொண்டவர். 'குண்டலினி' என்னும் கெளரி மாதாவை காவல் காத்து வருகிறார். இவர் தான் குண்டலினி மாதாவுக்கு தெரியப் படுத்தி விழிப்பு நிலை அடைய வைக்கிறார். இவருடைய கோபக்கனல் தான் வெப்பக்காற்றாக பரிவு நரம்பு மண்டலங்கள் மூலமாக எதிர் மறை சக்திகள் நுழையும் போது கைகளில் வெளிப்படுகிறது. எல்லா தடைகளையும் நீக்க கூடிய தெய்வமாக விளங்குகிறார். இவர் தான் எல்லாக் கணங்களுக்கும் அரசனாக இருந்து ஆட்சி செய்கிறார். சாதகர்கள் இத்தடைகளை நீக்கினால் தான் பரிபூரணத்துவம் பெற முடியும். கணேசரின் ஞானம் மிகவும் பரி பூரணமான ஞானமாகும். அறிவுகளுக்கு எல்லாம் இதயம் போன்றவர். (உண்மையான பொருளை அறிந்து கொள்ளும் திறன் ) கணேஷர் தெய்வ குழந்தை ஆதலால் விளையாட்டுத் தன்மையும், பேரானந்தமமும், கொண்ட குழந்தையாக விளங்குகிறார். மிகவும் ஆர்வம் கொண்டவராக வும், அன்பே வடிவானவராகவும் விளங்குகிறார்.
ஸ்தூல சரீரத் தன்மைகள் :
மூலாதாராவில் குண்டலினி ஷக்தி ஆதிசக்தியின் ஒரு துளி எனலாம் . மூலாதாரச் சக்கரம் பிறப்பு உறுப்பு கள் , கழிவு உறுப்புகள் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றன. இது சாதகரின் பாலுணர்வை வெளிப்படுத்தும் சக்கரம் எனலாம். பாலுணர்வு என்பது மிகவும் மென்மையானது. இது அன்பை வெளிப்படுத்தக் கூடிய ஸ்தூல சரீர உணர்வே ஆகும் . இதை திருமண பந்தத்தின் மூலம் புனிதத் தன்மையுடன் வெளிப்படுத்த வேண்டும் . பிறப்பு - இறப்பு இதன் மூலம் செயல்படுகிறது . சமநிலையற்ற பாலுணர்வு நம்மை அடிமைப்படுத்துகிறது. ஆன்ம தரிசனம் பெற்றவர்கள் சரியான சமநிலையில் கற்புடன் வாழ்க்கை நடத்த வேண்டும். எல்லா உயிர்களிலும் ஆதரப் பொருளாக விளங்குகிறது.

சுத்திகரிப்பு:
பழுதடைந்த மூலாதார சக்கரம் கீழ்கண்ட வகையில் செயல்படும். தெளிவில்லாத சிந்தனை, குறைவான ஞாபக ஷக்தி, மனதில் கவலை, நீண்ட கால வியாதிகள், மனோ வியாதிகள் , மூல வியாதிகள் , சிறுநீரகம் செயல் இழத்தல் போன்றவை .
கனிமங்களை பயன்படுத்தும் முறை :
தரை மீது அதிகமாக அமர வேண்டும். இடது கை இடது மூலாதார சக்கரத்தின் மீதும், வலது கை பூமியின் மீதும் வைத்து " த்வமேவ சாட்ஷாத் ஸ்ரீ நிர்மல் கணேஷ சாட்ஷாத் ஸ்ரீ ஆதி ஷக்தி மாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி நமோ நமோஹா ".
உப்பு கரைத்த நீரில் நின்று எல்லா சக்கரங்களுக்கான மந்திரங்களை சொல்லி எதிர்மறை சக்திகளை தண்ணீரில் இறக்க வேண்டும். இறுதியாக சகஸ்ராரத்தில் சில நிமிடம் தியானம் செய்ய வேண்டும்.

உறுதி மொழி :
அருள்மிகு அன்னையே குழந்தை உள்ளத்தையும் , ஞானத்தையும் கொடுத்து அருள்புரிய வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக