Translate

செவ்வாய், 10 மே, 2011

சூட்சும சரீரம்


சூட்சும சரீரம் என்பது இட நாடி, பிங்கள நாடி, சுழுமுனை நாடி மற்றும் சக்கரங்கள் சேர்ந்ததாகும்.



இட நாடி
இது சந்திர நாடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாடி இடது பக்கம் மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா சக்கரம் வரை இடது பரிவு மண்டலத்தில் செயல்படுகிறது. ஆக்ஞா வழியாக குறுக்கு வாட்டில் சென்று மூளையின் மறு பக்கத்தில் பலூன் போன்று விரிவடையும். இது மமகாரம் என்று அழைக்கப்படுகிறது.
இது இச்சா சக்தியாக விளங்குகிறது. சாதகனின் விருப்பத்தை குறிக்கிறது. இது இறந்த கால நினைவுகளை வெளிப்படுத்தும்.
இதன் தேவதை மகாகாளி பைரவர் ஆகும்.
சோம்பல், மமகாரம், மூடநம்பிக்கை, மந்திரம், தந்திரம், பிளாக் மேஜிக், மோக வெறியாட்டம், குற்றவுணர்வு, குழந்தையின் மீது அளவிற்கு மீறிய பற்றுதல் போதை பொருட்கள் பயன்படுத்துதல், ஆவிகளுடன் பேசுதல், தன்னம்பிக்கை இழத்தல், உணர்வுகளுக்கு அடிமையாதல், ஆகியவைகளை நாடிகளின் எதிர்மறை செயல்பாடுகள்.

ஸ்தூல வெளிப்பாடுகள்
குளிர்ச்சியானது. அமாவாசை - ஆழ்மனம். ஆவிகளின் சஞ்சாரம், ரகசிய செயல்பாடுகள் , நிலையற்ற எண்ணங்கள் , இரவு காலம், சாதகரின் அனுபவங்கள், கபம் , தமோ குணம். நீல நிறம்.


பிங்கள நாடி

இது சூரிய நாடி. இந்த நாடிக்குரிய தேவதை மஹா சரஸ்வதி ஹனுமனா. இது சுவாதிஸ்டான சக்கரத்திலிருந்து ஆக்ஞா வழியாக இடது பக்க மூளைக்கு சென்று அடைகிறது. அங்கு பலூனைப் போன்று அகங்காரம் விரிவடைகிறது.
இது செயல்களுக்கான சக்தியாகும். இது கிரியா சக்தி ஆகும்.
மனதின் அகங்காரம், முரட்டு தன்மை வன்முறை , முன்னிலைப்படுத்திக் கொள்ளுதல், உணர்ச்சி வசப்படுதல், தந்திரப் புத்தி, சுரண்டுதல் ஆகியவை நாடிகளின் எதிர் மறை செயல்பாடுகள் .
ஸ்தூல வெளிப்பாடுகள்:
பவுர்ணமி , பகல் காலம் , போட்டி மனப்பான்மை, எதிர் காலம், பித்தம் , போலித்தன்மை , ரஜோகுணம் , மஞ்சள் நிறம்


சுழுமுனை நாடி:

இது பரிவு நரம்பின் மைய மண்டலமாகும். மூலாதாரத்திலிருந்து சஹாஸ்ரரா வரையில் இந்த நாடி செயல்படுகிறது . இது சத்வ குணத்தை குறிக்கிறது. உயிர்களின் பரிணாம சக்தியை விரட்டா ரூபத்தில் வெளிப்படுத்துகிறது. இந்த நாடியை பாதுகாக்கிற தேவதை மகாலட்சுமி.


ஸ்தூல சரீரத்தில் ஏழு சக்தி மையங்கள் உள்ளன. இந்த சக்தி மையங்களை சக்கரங்கள் என அழைக்கின்றோம் . இது சக்கரங்கள் போல் சரீரம், புத்தி, மனம், காரண சரீரம் , ஆன்மா ஆகிய நிலையில் சுழன்று கொண்டு இருக்கின்றன. காந்த சக்தி போன்ற இந்த சுழற்சி குறுக்கிலும் , நெடுக்கிலும் வலப்பக்கமாக அமைகிறது. எல்லா சக்கரங்களிலும் குறிப்பிட்ட அலைவரிசையில் செயல்படுகிறது.
ஏழு வகையான சக்கரங்கள் நமது உடலில் அமைந்துள்ளன. ஒவ்வொரு சக்கரமும் நுண் அதிர்வுகளை வெளிப்படுத்துகிறது. எவ்வாறு சக்கரங்கள் தடைப்படுகிறது என்பதை தெய்வீக நுண் அதிர்வுகள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். சக்கரம் சம்மந்தப்பட்ட எண்ணங்களும், செயல்களும் அதிர்வுகளை மாற்றுகிறது.

1 . மூலாதார சக்கரம்
2 . சுவாதிஸ்டான சக்கரம்
3 . நாபி அல்லது மணிப்பூரகம் சக்கரம்
4 . அனாஹ்த சக்கரம்
5 . விஷுத்தி சக்கரம்
6 . ஆக்ஞா சக்கரம்
7 . சஹஸ்ரார சக்கரம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக