Translate

செவ்வாய், 31 மே, 2011

கூட்டுப் பிரபஞ்ச உணர்வை நோக்கி பயணம்





நீங்கள் இப்போது ஆன்ம விழிப்புணர்வு பெற்று உங்களுக்குள் அமைதி நிலவுகிறது. நமக்குள்ளிருக்கும் அழகும், கருணையும், அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் மேலும் நாம் உள்முகமாக செல்ல வேண்டும். தியான நிலையை அடைய விரும்புவார்கள். நீங்கள் தாகத்துடன் இருக்கும் பொது நீரை தேடி செல்வீர்கள். அதைப் பருகி ஆனந்தமும் , அமைதியும் அடைகிறீர்கள். புறச்சூழலில் இருக்கும் பொருட்கள் எவ்வாறு உங்களுக்கு அமைதியும் , ஆனந்தத்தையும் கொடுக்கும்? அகச்சுழலில் அவற்றைத் தேட வேண்டும். புறச்சுழலில் உள்ளப் பொருட்களில் விருப்பம் கொள்ளாமல் தவிர்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

தியானம் செய்யுங்கள். அகமுகமாக உங்களுக்குள் இருக்கும் ஆன்மாவை அடைந்து சச்சிதானந்த உணர்வைப் பெறவும் உள்ளிருக்கும் ஆன்மா பிரகாசிக்கும் பொது அதன் ஒளியில் சூட்சுமமாக உள்ள அந்தரங்க தனித்தன்மைகள் வெளிப்படுகிறது. இதை அணுக நீங்கள் உங்களுக்குள் அகமுகமாக செல்ல வேண்டும். இந்த ஆன்ம சக்திக்கு புறம்பாக செயல்படும் போது உங்களது பயணம் தடைபடுகிறது.

உங்களது அன்பின் சக்தியை அனுபவிக்க வேண்டும். இது இறைவனை நோக்கி செல்லும் தனி நபரின் பயணமாகும். நீங்கள் தியானம் செய்யும் போது, அந்த இடத்தை அடைகிறீர்கள். பிறகு கூட்டுப் பிரபஞ்ச உணர்வை அனுபவிக்கிறீர்கள். இந்தப் பயணமானது தனி மனிதனில், உல் முகமாக பயணம் எனலாம். இதில் எவரும் உங்களுடன் பயணம் செய்வதில்லை. இதில் எவரும் உங்கள் உறவினரல்ல, சகோதரர் அல்ல, நண்பனல்ல, நீங்கள் முழுவதுமாகத் தனிப்பட்டவரே .

தனிமையில்தான் செல்ல வேண்டும். எவரையும் வெறுக்கக் கூடாது. பொறுப்பற்று இருக்க வேண்டாம். தனிமையில் பயணம் செய்தாலும் அந்தப் பேரானந்த சாகரத்தை அடைந்தவுடன், உலக மக்கள் அனைவரும் உன் உறவினராகிறார்கள். உலகமனைத்தும் உங்களது வெளிப்பாடே, எல்லோரையும் சமமாக மதிக்க முடிகிறது. நீங்கள் ஆன்ம நிலையை அடையும் போது முழுமையான விரிவடைதல் நிகழ்கிறது. இதை உங்கள் ஆன்ம சக்தியால் உணர முடிகிறது. அமைதி , அடக்கம், பேரானந்த நிலை ஏற்படுகிறது. அதிக நேரம் தியானத்தில் இருக்க வேண்டியதில்லை. நீங்கள் எத்தனை நேரம் எடுத்துக் கொண்டாலும் , புறச்சுழளிளிருந்து, அறிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும். இந்த ஆன்மப் பிரதிபலிப்பை எவ்வாறு மற்றவர்களுக்கு செலுத்துவீர்கள். நீங்கள் பெரும் பேரானந்தத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். உங்களிடமிருந்து ஒளியாக மற்றவர்கட்கு செலுத்த வேண்டும். ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளக்கு ஒளி பெறுவது போல் எல்லோரையும் சென்று சேர்க்க வேண்டும்.



நீங்கள் பெற்ற பேரானந்தம் உங்களை சுற்றி இருப்பவர்களும் பெற வேண்டும் என்று தொடர்ந்து விருப்பம் கொள்ள வேண்டும். நீங்கள் ஆழ்நிலை தியானம் பெறும் போது உங்கள் கதிர்வீச்சு மற்றவர்கள் மீது அதிகமாக இருக்கும்.

------ மாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக