Translate

திங்கள், 2 மே, 2016

ஜனகரின் வாழ்க்கையும் போதனைகளும் கவனக் கூர்மை வாய்ந்தவர்



கலப்பை சின்னத்தைத் தன் கொடியில் பொறித்திருந்த ஜனகர் மிதிலையின் அரசன் ஆவார்.  இவர் ஹர்ஷவரோமா என்ற அரசனின் புதல்வர் ஆவார்.  இந்த அரசன் நைமி என்ற அரசனின் வம்ச வழியில் வந்தவர்.  இந்த அரச பரம்பரையில் ஆட்சி செய்த அரசர்கள் எல்லோருமே கல்வி கேள்விகளில் தேர்ச்சிப் பெற்றவர்களாகவும், பண்பாடு நிறைந்தவர்களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆதிகுரு ஸ்ரீ தத்தாத்ரேயாவைப் போன்றே ஜனகரும் தூய்மையாகக் கள்ளங்கபடமின்றி விளங்கினார்.  அவருடைய சக்தியாக மகள் ஸ்ரீ சீதையும் விளங்கினார்.  சீதை ஸ்ரீ ஆதிசக்தியின் அவதாரமாகும்.  “ யோக வஸிஷ்ட” க்ரந்தங்களில் குறிப்பிட்டுள்ளபடி அரசர் ஜனகர், அக்கால சித்தர்களின் தத்துவப் பாடல்களை கேட்டே மெய் நிலை ஞானத்தெளிவு பெற்ற ஆன்மா என்பது பொருள். இந்தப் படல்கள், “ சித்த கீதா” எனப் புகழ் பெற்றவை.  இந்த சித்த கீதங்கள் அன்றாட தினசரி வாழ்க்கையில் பொய்மையையும், வெற்மையையும் பற்றி விள்ககுகின்றன என்பதோடு, அவைகளைக் களையும் விதத்தையும் கூறுகின்றன.  ஒருவர் தன் கவனத்தை எப்படி அமைதிப்படுத்த வேண்டும், உடல் கடந்த, உடல் உணர்வு தாண்டிய ‘ விதேஹ’ நிலை அடைவது எப்படி என்றும் உணர்த்துகின்றன.
இந்த சித்தர்களின் அறிவுரைப்படி, ஸ்ரீ ஜனகர் ‘ விதேஹ’ நிலை அடைந்தார். ‘விதேஹ’ நிலையில் இருவர் முழுக் கவனமும் தன் ஆத்மா மீதே நிலை நிறுத்தப் பட வேண்டும் என்பது தான் நாம் அறிய வேண்டியது.  இந்த விதேஹ நிலையில் எல்லாம் செய்தும் ஏதும் செய்யாதவராகிறார்.  தன் செயலின் முழுப் பலனையும் அனுபவித்தாலும் கூட, திட்டமிட்டுச் செய்தல் என்பது அவரிடம் இல்லை.  இருந்தும் இல்லாமல் இருப்பது போன்று உணர்ச்சிகளுக்கு அப்பால் வாழ்ந்தார் ஸ்ரீ ஜனகர்.
விதேஹ நிலையில் எதிர்காலம் பற்றிய கவலைகள் கொள்வதில்லை என்பதோடு கடந்த காலம் பற்றியும் எண்ணுவதில்லை.  இவ்விதமாகவே ஸ்ரீ ஜனகர் தன் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்தார் எனலாம். இதையே ‘ஸஹஜானந்த விருத்தி’ எனக் கூறலாம்.  இதன் பொருள் “ தன்னியல்பான ஆனந்த மனநிலை “ என்பது தான்.

ஜெய் ஸ்ரீ மாதாஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக