Translate

வியாழன், 27 டிசம்பர், 2012

ஸ்ரீ கணேஷர்



ஸ்ரீ கணேஷர் மூஷிக  வாகனத்தில் பிரயாணம் செய்வதால் சிறிய உருவத்தில் இருப்பார். அவர் மிகவும் உன்னதமானவர். அவர் விவேகத்தில் மற்ற கடவுள்களைக் காட்டிலும் மேலானவர். அவர் ஞானத்தின் இருப்பிடம் நமக்கு ஞானம் வர வைப்பதில் குருவானவர். நாம் எவ்வாறு நடக்க வேண்டுமென்று கற்றுத் தருவார். ஸ்ரீ கணேசருக்கு எதிராக நடப்பவர்கள், ஸ்ரீ மாதாஜிக்கு எதிராக நடப்பவர்கள் ஆவார்கள். அவர்களை மன்னிக்க மாட்டார்கள். ஸ்ரீ கணேஷர் ஆதி மாதாவிற்கு தன்னை அர்பணித்துக் கொண்டவர். அவருக்கு வேறு தேவதைகள் கிடையாது.  எல்லா கடவுள்களைக் காட்டிலும் ஷக்தி வாய்ந்தவர்.  அவர் சக்திக்குமேலான ஷக்தி கிடையாது. 


கள்ளகபடமற்ற தன்மை என்றால் என்ன என்று மனிதர்களுக்கு புரிவதில்லை ? மூலாதார சக்கரத்தின் அதிபதியாக ஸ்ரீ கணேஷர் அமர்ந்துள்ளார். அவர் குண்டலினி சக்தியான தன் தாயின் வாயிற்காப்போன் போல் அமர்ந்துள்ளார். அவர் தான் குண்டலினி சக்தி மேலே எழும்பலாமா அல்லது கூடாதா என்று நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்டவர். ஆகவே ஸ்ரீ கணேசரின் ஆணையின்றி குண்டலினி சக்தி எழுவதில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக