Translate

சனி, 7 ஏப்ரல், 2012

சஹஜ யோகா கூட்டமைப்பு





தினமும் ஒன்றாகக் கூடுதல் பல பிரச்சனைகளைத் தவிர்க்க மிக அவசியமாகிறது. இந்த ஒன்றாகக் கூடுதலில் தான் நமக்கு முதிரும் பக்குவம் தொடங்குகிறது. இது உயிருள்ள ஒரு வழிமுறையாகும். நாம் ஒன்றாக கூடவில்லைஎனில் நாம் ஒரு நாள் காணாமல் போய் விடுவோம். இது ஒரு மரம் போன்றதாகும்.அம்மரத்திற்கு உண்டானவைகள் அனைத்தும் வளர்ச்சி அடையும். ஒரு தனி இல்லை தனியாக பிரிக்கப்பட்டால், அது இறந்து விடுகிறது. நாம் மரத்துடன் இணைந்து இருக்க வேண்டும். குளிர்காலத்தில் மரப்பட்டை இடையில் வளருவதால் இலைகள் உதிர்கின்றன. அதேபோன்று நாம் சஹ்ஜயோகாவின் அடிப்படை விதிகளை ஏற்காவிட்டால், நாம் தடையினை அமைக்கிறோம் எனலாம். எனவே நாம் நம்மை முழுவதுமாக திறந்து உயிர்சக்தியினை உறிஞ்சவேண்டும். ஆகவே அகங்காரம், மமகாரம், நம் முந்தைய கருத்துகள், நம்மில் ஏற்கெனவேயே அமைந்த அபிப்ராயங்கள் யாவற்றையும் அறவே ஒழித்து நாம் சரணடைய வேண்டும். இதனால் மரத்திற்கு எவ்விதப் பயனளிக்காது. ஆனால் உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். வாய்மை குன்றாத அறிவுத்திறம் இதனை செயலாக்க உணர்த்துகிறது. இதற்குப் பின்பு எல்லா ஆசீர்வாதங்களும் வரத் தொடங்கும். ( 871016 )

சஹஜயோகிகளுடன் ஒன்று சேர்ந்து இருப்பதே உங்களை பலப்படுத்திக் கொள்ள மிகச்சிறந்த வழியாகும். கூட்டு வழிபாடு, கூட்டுத்தியானம், கூட்டு ஆரத்தி நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் கலந்து கொள்வது மிக இன்றி அமையாததாகும். இவ்வாறு ஒன்றாக கூடும்போது உங்களுக்கு ஏதேனும் ஒன்று நிகழிகிறது . வீட்டில் அமர்ந்து எத்தனையாவது செய்து கொண்டு இருப்பின் ஒன்றும் பயன்யிராது. எங்கும் எப்பொழுதும் கூட்டாக கூடி தியானத்திற்கு உட்காரும்போது, இது ஒரு கூட்டு ஆண்மையின் இயல் நிகழ்ச்சி என்பதால் சஹஜயோகம் தானே வெளிப்படுகிறது. கணக்கியல் சார்ந்தவை ஒன்றினை இங்கு நினைவு கூறலாம். ஏழுபேருக்கு மேல் ஒன்றாகக் கூடியதிற்குப் பின்பு அங்கு சஹஜ யோகா செயல்படுகிறதைக் காணலாம்(770126)

முழுவதுமாக நடுமையத்திலே இருக்க வேண்டும். " பணிவாக இரு" என்று உன் மனத்தினை நோக்கிக் கூறு. தன தனித்தன்மை வாய்ந்தவன், உயர்ந்த ஆத்மாவினேக் கொண்டவன் என்ற முட்டாள் தனமாக மனப்பான்மைகள் யாவும் தானே மறைந்து போகும். ண்டுமையத்தினைஸ் சுற்றி நகர்ந்து மையத்தில் இருக்கும்படியாக மையத்தை நோக்கி செல்கிற சக்தியுடன் இரு. ஆனால் மையத்திநின்று வெளி நோக்கி செல்லும் சக்தியும் ஒன்று உண்டு. ஏதாவது ஒரு அசாதாரணமான அளவு சென்றாலோ மிக சிறந்தவையினை செயலாக்கினாலோ தனிச்சிறப்பு வாய்ந்ததோ, வீண் ஆடம்பரமாய் நடப்பதாலோ அல்லது கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வர எத்தனித்தாலோ திடீரென்று வேறு திசையில் சுற்றோட்டத்தில் இருந்து தான் வெளியேற்றப்படுகிறதைக் கண்டு மிக வியப்படைவீர்கள். கூட்டமைப்போடு கூடி இல்லையெனில் அதனை " எதிர்மறை சக்தி" எனலாம். (890617)

"கூட்டமைப்பு" என்பது ஸ்ரீ கிருஷ்ணாவின் அடிப்படைத் தத்துவமும் குருவின் தத்துவமும் ஒன்றாக இணைந்ததாகும். குருவாக ஆனவுடன் கூட்டமைப்பு தொடங்குகிறது. இந்த இரு தத்துவங்களும் ஒன்றாக இணையும் போதுதான் கூட்டமைப்பு தொடங்கி, அதன் விளைவாக விவேகம் மதிநுட்பம் உனக்கு கிடைக்கிறது. எனவே விவேகத்தினையும் மதிநுட்பத்தையும் மேமேபடுத்த ஸ்ரீ கிருஷ்ணாவிற்கு மிக விருப்பமான வெண்ணை, நெய்யினை சூடு செய்து நுண்ணதிர்வு மேம்பாடு அடைய மூக்கில் இடலாம். இதற்கு முன்பு குருதத்துவத்தினை சுட்டிக் காட்டும் உப்பு நீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். ( 850502 )

இந்த கூட்டமைப்பு சஹ்ஜயோகாவிற்கு வர மனிதர்களை வற்பு றுத்துவதல்ல. சஹ்ஜயோகவிற்கு வந்தவுடன் வாழ்வின் ஆனந்தத்தை அறிவீர்கள். உங்கள் அன்பை அவர்கள் உணர்வார்கள். அன்பு மிக சிறந்தது என்பதை காண்பீர்கள். அன்பு மற்றவர்களுக்கு உதவுவது மட்டுமின்றி தனக்கும் மிக உதவியாய் இருக்கிறது என்பதைக் காண்பீர்கள். (970823 )

கூட்டமைப்பு தான் சஹஜயோகாவின் தொடக்கம் எனலாம். சஹஜயோக தனிமனிதனுக்கு மட்டும் அல்ல. ஒரு பகுதியிலோ, தனி மனிதநிடமோ ஒரு பிரச்சனை இருப்பின், அது கூட்டமைப்பு முழுவதுக்கும் ஒரு முக்கியபிரச்சனையாக அமையும். கூட்டமைப்பில் ஒரு பிரச்சனைஎனில் அவை தனிமனிதன் மீது பிரதிபலிக்கும். ( 890611 )

கூட்டமைப்பின் அமைதி குலைக்கப்பட்டால், விசூதி, சஹஸ்தாரா ஆகிய இரு சக்கராக்களில் பிடிப்பு ஏற்படும். இது மீண்டும் கூடுதலானால், இருதய சக்கராவையும், இத்துடன் ஆக்ஞா சக்கராவின் இடது, வலது பக்கமும் சேதமேயானால் உனக்கு " ஏகாதசருத்ரா" உருவெடுக்கும். (801116 )

கூட்டாக நிகழும் நிகழ்ச்சியே சஹஜயோகாவின் மிகச் சிறந்த சட்டம் எனலாம்(880103 )

இது சஹஸ்ராராவில் அமைந்துள்ளதால் இந்த கூட்டமைப்பில் இணையாமலும், கூட்டமைப்பபின் ஆனந்தத்தில் அனுபவிக்காமல் இருப்பின் நம்மிடம் எதோ குறைபாடுகள் உள்ளன என்று பொருளாகும் . ஒருவருக்கொருவர் குறை கூறுவதைத் தவிர்கவும்.(900923 )

நாம் ஸ்ரீ அன்னையின் உடலில் அமைந்த செல்களாகும். ஸ்ரீ அன்னை நம்மை விழிப்புணர்வு அடைய செய்தார். நாம் நோய் வாய்பட்டவரானால் ஸ்ரீ அன்னையும் நோயால் பீடிக்கப்படுவார். அவர் அதிக நுண்ணதிர்வுகளை விடுவிக்கும் போது அதனை நம்மால் பெற்றுக் கொள்ளவில்லை எனில் அவர் நோயால் பீடிக்கப்பட்டவராக உணர்கிறாள். நாங்கள் அந்த நுண்ணதிர்வுகளை கிரகிக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் . ( 801116 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக